Wednesday, June 10, 2026
No menu items!

புதிய செய்திகள்

ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கையர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.   இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.   இதன் முதல் கட்டமாக புதிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து சகலருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, டிஜிட்டல் அடையாள...

இன்றும் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்...

நெல்லியடி வியாபாரி கைது..!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில்  போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவரே நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்த ஹட்டன் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...

டொனால்ட் ட்ரம்பிற்கு தடை..! – நீதிமன்ற உத்தரவு

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு இருப்பதன் காரணமாகவே இந்த தடையை விதித்து கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். இது போன்ற தடை விதிப்புக்காக...

IPL இல் சாதனை படைத்த ஆஸி. வீரர்கள்

நேற்றையதினம் (19)  துபாயில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் ஏலத்தில் அவுஸ்திரேலிய அணியின் இரு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்சை ஹைதராபாத் அணி 20 கோடி 50 இலட்சம் இந்திய ரூபாவிற்கு ஏலம் எடுத்தது. IPL வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை...

இந்திய வரலாற்றில் முதன் முறையாக 141 எம்.பி.க்கள் இடைநீக்கம்!

 இந்திய நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை   இந்த அமர்வில்  இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 13ஆம் திகதி மக்களவையில் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவைக்கு...

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை – சட்ட விரோத பொருட்கள் மீட்பு

தீர்வை வரி செலுத்தப்படாத ஒரு தொகைப்  பொருட்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி, புத்தளம், கொலன்னாவை மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மறைத்து வைத்து வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. விமான நிலையத்தில்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்திட்டம் முன்னெடுப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு Global Max Networks (Pvt) Ltd நிறுவனத்தால் பல்வேறு உதவிப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தின்  கண்டாவளை, பெரியகுளம், முரசுமோட்டை பகுதிகளில் உள்ள நலன்புரிநிலையங்களுக்கு இந்த  உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த உதவித்திட்டத்தை நேற்று (19) Global Max Networks (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் நேரடியாக சென்று நிலையங்களுக்கு பொறுப்பானவர்களிடம் பொருட்களை கையளித்தார். கிளி/கண்டாவளை மகாவித்தியாலய...

IPL ஏலத்தில் தெரிவான இலங்கை வீரர்கள்

2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்றைய தினம் டுபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இலங்கை அணியின் சார்பில் 8 வீரர்கள் பெயரிடப்பட்டிருந்தனர். இவர்களில் 3 வீரர்கள் மாத்திரமே அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்படி, நுவன் துஸாரவை 4 கோடியே 80 இலட்சம் இந்திய ரூபாய்க்கும், டில்ஸான் மதுசங்கவை 4 கோடியே 60 இலட்சம் இந்திய...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் . மேல், சப்ரகமுவ,...
- Advertisement -

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...