தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!
தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
CID யில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர!
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை முன்னிலையாகியுள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடுகளின் தலைவர்களுக்கு விருந்தளித்த ட்ரம்ப்..!!
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்-காஸா போர், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் போன்றவற்றால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து
கடற்கரையோரங்களில் மணிக்கு 70 கிமீ வரை காற்று வீசும் வாய்ப்பு – கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை!
காற்றின் வேகம் மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கரையோரங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களை கவனமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழில் நடவடிக்கைகளிலும், கடல் வழிப் போக்குவரத்திலும் ஈடுபட வேண்டாம்
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நேற்று (17) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) மற்றும் இம்மாதம் 01 திகதி அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட
தொடருந்து மோதி காட்டு யானையொன்று பலி!!
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தொடருந்து மோதி இன்று அதிகாலை காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது. கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டள்ளது. அப்பகுதி மக்களின் கூற்றுப்படி, அதிகாலை 3 மணி முதல் யானை கிராமத்தில் சுற்றித் திரிந்து வருவதாகவும் அப்பகுதியில் உள்ள நெல் வயல்களுக்குள் நுழைந்து வருவதாகவும் அறியப்படுகிறது. யானை வந்தபோது வனஜீவராசிகள் பாதுகாப்பு
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்க்கு நரம்பு நோய்..!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதித்ததில் அவருக்கு ‘Chronic Venous Insufficiency’ எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய், உலகளவில் 20ல் ஒருவரை பாதிக்கும் எனவும், கால்களில் இருந்து இதயத்திற்கு இரத்தம் சரியாக திரும்பாததால் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Chronic Venous Insufficiency என்பது நரம்புகளில் இரத்தம் தேங்கி, நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரிப்பதற்கு
தேயிலை தயாரிப்புக்கு ரூ.3 அனுமதிக் கட்டணம் – நிதி குழுவின் அங்கீகாரம்!
1956ஆம் ஆண்டின் 16ஆம் இலங்கை தேயிலை (வரி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான புதிய ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த ஒழுங்குவிதம், 2024 ஜூலை 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ த சில்வாவின் தலைமையிலான கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இதன்படி, ஒரு கிலோகிராம் தயாரிக்கப்பட்ட தேயிலைக்கு ரூ.3 அனுமதிக்
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 13 யானைகள் சிகிச்சையில் – வனஜீவராசிகள் திணைக்களம் தகவல்!
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 13 யானைகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ‘பாத்திய’ என்றழைக்கப்படும் யானை உயிரிழந்ததை அடுத்து, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வனவிலங்கு சுகாதார பணிப்பாளர் தாரக பிரசாத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, அனுராதபுரத்தில் 7 யானைகளும், பொலன்னறுவையில் 3 யானைகளும்,
கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய 15 வயது சிறுவன் – வெள்ளை வேன் சம்பவம் அதிர்ச்சி!
கொழும்பு – கஹதுடுவ பகுதியின் 15 வயது சிறுவன் ஒருவர் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளை வேனில் கடத்தப்பட்ட குறித்த சிறுவன், இரத்தினபுரியில் வாகனத்திலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் 119 காவல்துறையின் அவசர பிரிவுக்கு மேற்கொள்ளப்பட்ட அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து, இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் குறித்த சிறுவனை காவல்துறையினர் தமது