ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, மீண்டும் பொறுப்பேற்றுக் கட்டியெழுப்புமாறு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் 1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை மீளப்பெறுமாறும் அவர்...
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை அமுல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு விஜயத்தின்...
கொழும்பு மாநகர சபையின் (CMC) முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) வ்ரே காலி பால்தசார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
117 உறுப்பினர்களைக் கொண்ட உள்ளூர் கவுன்சிலில் 61 வாக்குகளைப் பெற்று பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற பிறகு பால்தசார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமகி ஜன பலவேகயா (SJB) கட்சியின் ரிசா சாரூக்கும் இவருக்கும் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி இடம்பெற்றது.
கிட்டத்தட்ட ஒரு...
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று நடைபெற்றது.
இதன்போது நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மதிவதனி 3 வாக்குகள் வித்தியாசத்தில்...
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று நடைபெறவுள்ளது.
45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையில் 23 ஆசனங்களைக் கொண்டிருக்கும் தரப்பே ஆட்சியமைக்க முடியும்.
எனினும், எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருக்காத நிலையில், கட்சிகள் கூட்டணிகளை அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்து வருகின்றன.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழ்...
ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது.
அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று ஜகத் குமார ராஜபக்ஷ தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
உப தலைவராக சுயாதீன குழுவைச் சேர்ந்த ஆர்.முருகேஷன் தெரிவானார்.
அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தை பெரும்பான்மை வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
இன்று (12) காலை நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் இமாதுதீன் மூன்று வாக்குகளை அதிகமாக பெற்று அக்குரணை பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு தெரிவாகியுள்ளதாக மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து அறிவித்தார்.
அக்குரணை பிரதேச சபையில்...
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைத் தவறாகப் பயன்படுத்தி இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்காக நீதி அமைச்சின் செயலாளர் மற்றும்...
பண்டாரவளை மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, அந்த மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்செலாகே சாகர தீர விஸ்வவிக்ரம தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேயர் பதவிக்காக இன்று நடைபெற்ற தேர்தலில் 04 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்று அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பண்டாரவளை மாநகர...
வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைக்கு புதிய உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தொழிற்சாலை தற்போது லாபம் ஈட்டி வருவதாக அமைச்சர் தனது முகப்புத்தக பதிவு ஒன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிது காலம் மூடப்பட்டிருந்த இந்தத் தொழிற்சாலை, இப்போது லாபம்...
மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அரச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது அப்பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் ஒருவர்...