இன்றைய நாளுக்கான வானிலை ..!!
இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் விருத்தியடைந்துள்ள தளம்பல் நிலை காரணமாக அடுத்துவரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். கிழக்கு, வடமத்திய , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும். மத்திய மற்றும் ஊவா
இந்திய வீராங்கனைகளுக்கு சம்பள உயர்வு..!!
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீராங்கனைகளுக்கான கட்டணம் 2.5 மடங்காக உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் பல நாள் போட்டி தொடரில் விளையாடும் சிரேஸ்ட வீராங்கனைகளுக்கு
கூகுளில் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு அணி தொடர்பில் வெளியான தகவல்..!!
உலகம் முழுவதும் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டு கூகுள் தேடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேபோல் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் போட்டியில் இதுவரை கிண்ணத்தை வெல்லாத அணிகளாக உள்ள இந்த இரண்டு அணிகளை பயனர்கள்
2026 T20 உலகக்கோப்பை: பெப்ரவரி 7 முதல் ஆரம்பம்!
10-வது ஐசிசி ஆண்கள் இருபதுக்கு 20 (T20) உலகக்கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளன. இத்தொடர் 2026 பெப்ரவரி 7 முதல் 29 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சம்பியனான இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை மும்பையில் எதிர்கொள்கிறது. தொடக்க நாளில் இந்தியா உட்பட ஆறு அணிகள் களமிறங்கும். குழு
T20 முத்தரப்பு தொடருக்கு இலங்கை அணியில் வியாஸ்காந்த் !
பாகிஸ்தானில் ஆரம்பமாக உள்ள இருபதுக்கு 20 முத்தரப்பு தொடருக்கான இலங்கை தேசிய அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஒருநாள் தொடரின்போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இன்னும் முழுமையாக குணமடையாத வனிந்து ஹசரங்க அணியில் சேர முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக வியாஸ்காந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது கட்டாரில் நடைபெற்று
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் அணி விற்பனைக்கு: போட்டிபோடும் நிறுவனங்கள்!
விஜய் மல்லையா உருவாக்கிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி, இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்தது. 2008 ஆம் ஆண்டில் ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான இந்த அணி, கடந்த 17 ஆண்டுகளில் பல சாதனைகளை பதிவு செய்தது, தற்போதைய சீசனில் கிண்ணத்தை கைப்பற்றியும் அசத்தியது. ஆனால் அந்த வெற்றியை
ராஜஸ்தான் ரோயல்ஸ் 2026 ஐபி.எல்: குமார் சங்ககாரா மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமனம்!
2021 இல் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பயணத்தை தொடங்கிய குமார் சங்ககாரா வழிநடத்தலில், சாஞ்சு சாம்சன் தலைமையிலான அணி கடந்த நான்கு சீசன்களில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும், 2024 உலகக்கோப்பை வெற்றிக்காக இந்திய அணியை வழிநடத்திய ராகுல் திராவிட் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், சாஞ்சு சாம்சனுடன் ஏற்பட்ட பகைமை வதந்திகள்
19 ஆவது ஐ.பி.எல் தொடர் 2026: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் இவரா?
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 19ஆவது ஐ.பி.எல் தொடர் வீரர்களுக்கான மினி ஏலம் டிசம்பர் 16 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (BCCI) அறிவித்துள்ளது. இது தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெளிநாட்டில் நடக்கும் ஏலமாகும். கடந்த 2023ல் துபாயில், 2024ல் ஜெத்தாவில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. தற்போது,
இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் போட்டிகள் பிற்போடப்பட்டன!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஒருநாள் தாமதமாக நடத்தப்படவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (13) நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (14) நடைபெறும். மேலும், முன்னதாக 15 ஆம் திகதி நடத்தப்படவிருந்த மூன்றாவது மற்றும் இறுதி போட்டி நவம்பர் 16 ஆம்