வடக்கு மாகாண சுகாதாரத் துறையில் வேறுபட்ட நடைமுறைகள் – எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாட்டு!
வடக்கு மாகாணத்தில் மட்டுமே சுகாதாரத் துறையில் சில தனிப்பட்ட நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், வடக்கு மாகாண தாதியர் உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இன்று (13) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது, அவர் தெரிவித்ததாவது: “மன்னார் உட்பட வடக்கு மாகாணம் முழுவதும் நேற்று (12)
பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்ட வரைபு நீதி அமைச்சருக்கு சமர்ப்பிப்பு!
பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்மொழிந்த புதிய வரைபு நீதி அமைச்சர் ஹர்ஷன் நாணயக்காரவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபுவை குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, நேரடியாக நீதி அமைச்சரிடம் கையளித்தார்.
இன்றைய நாளுக்கான வானிலை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும்
சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் – விசாரணைக்குழுவிற்கு எதிர்க்கட்சியிலிருந்து நான்கு உறுப்பினர்கள் நியமனம்!
சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றம் நியமிக்கும் விசேட குழுவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், தயாசிறி ஜயசேகர, மற்றும் இராசமாணிக்கம் இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோர் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இந்த நான்கு பேரின் பெயர்கள் நேற்று
15 குற்றவாளிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தலைமறைவு..!
கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளை பிறப்பித்துள்ள 82 இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புப் படையினர் இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், ஏற்கனவே இன்டர்போலுக்குத் தகவல் அளித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிவப்பு அறிவிப்பு பெற்றவர்களை நாட்டின் பாதுகாப்புப் படையினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்ட பாதாள உலகில் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கராவை துபாய் காவல்துறை விரைவாகக் கொண்டுவர முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் வழக்கு முடியும் வரை அவரை நாட்டிற்கு அழைத்து வர முடியாது என்று ஒரு சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இந்த வழக்கு முடிவடைய குறைந்தது 4 மாதங்கள் ஆகும் என்றும் அந்த அதிகாரி கூறினார். இலங்கையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தனது சார்பாக துபாய் சென்றுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரான முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (12) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜரானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்த நிலையில், விசாரணை அதிகாரிகள் அவரை அங்கிருந்தபோதே காவலில் எடுத்தனர். அவர்மீது முன்பு பதிவு செய்யப்பட்டிருந்த சில ஊழல் குற்றச்சாட்டுகள்
இன்றைய நாளுக்கான வானிலை !
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய , சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இன்றைய நாளுக்கான வானிலை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து; 5பேர் உயிரிழப்பு!
தலாவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை அறிவித்துள்ளது. மேலும் குறித்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 411 பகுதியில் இருந்து தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்தில் 40க்கும் அதிகமான பயணிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – உயர்தரப் பரீட்சை மாணவர்கள் உட்பட பலர் காயம்!
அநுராதபுரம் தலாவை ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலாவப் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர். தற்போது காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள்