வாக்களிக்கும் வயது16 ஆக குறைப்பு..!!

வாக்களிக்கும் வயது16 ஆக குறைப்பு..!!

Jul 18, 2025

இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி கடந்த ஆண்டு ஆட்சிக்கு வரும் முன், வாக்களிக்கும் வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தில் வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்துள்ளது அந்நாட்டு அரசு. இதன்மூலம் ஜனநாயகத்தில் மக்கள் அதிகளவில் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது கடந்த ஆண்டு நடந்த தேர்தலில்

Read More
நாடுகளின் தலைவர்களுக்கு விருந்தளித்த ட்ரம்ப்..!!

நாடுகளின் தலைவர்களுக்கு விருந்தளித்த ட்ரம்ப்..!!

Jul 18, 2025

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்-காஸா போர், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் போன்றவற்றால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து

Read More
அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப்க்கு நரம்பு நோய்..!

அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப்க்கு நரம்பு நோய்..!

Jul 18, 2025

அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதித்ததில் அவருக்கு ‘Chronic Venous Insufficiency’ எனப்படும் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய், உலகளவில் 20ல் ஒருவரை பாதிக்கும் எனவும், கால்களில் இருந்து இதயத்திற்கு இரத்தம் சரியாக திரும்பாததால் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Chronic Venous Insufficiency என்பது நரம்புகளில் இரத்தம் தேங்கி, நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரிப்பதற்கு

Read More
ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் பெரும் தீவிபத்து: 50 பேர் உயிரிழப்பு!

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் பெரும் தீவிபத்து: 50 பேர் உயிரிழப்பு!

Jul 17, 2025

ஈராக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இதன் ஆரம்ப விசாரணை முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இன்று (17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சுமார் 50 பேர்

Read More
தமிழர் தொடர்பான குடியேற்ற விவகாரம்: ஆனந்தசங்கரிக்கு கனேடிய பிரதமரின் நம்பிக்கை!

தமிழர் தொடர்பான குடியேற்ற விவகாரம்: ஆனந்தசங்கரிக்கு கனேடிய பிரதமரின் நம்பிக்கை!

Jul 17, 2025

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் செந்தூரன் செல்வகுமாரனின் குடியேற்ற விண்ணப்பத்திற்கு, கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ஆதரவு கடிதங்கள் எழுதியதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மார்க் கார்னி, அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். செல்வகுமாரன் மீது LTTE தொடர்பு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர்

Read More
114 வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் மரணம்..!!

114 வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் மரணம்..!!

Jul 16, 2025

உலகின் வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் என்று நம்பப்படும் பிரித்தானிய-இந்தியரான ஃபௌஜா சிங், 114ஆவது வயதில் விபத்து ஒன்றில் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பஞ்சாபில் சிற்றூந்து ஒன்றில் மோதுண்டு அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், 100 வயதுக்கு மேற்பட்டவர் உட்பட பல வயது பிரிவுகளில் மரதன் ஓட்டங்களில் பங்கேற்று சாதனை படைத்தார். அவர் 89 வயதில் ஓடத் தொடங்கி, 2013

Read More
காந்தி ஓவியம் 6 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை..!!

காந்தி ஓவியம் 6 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனை..!!

Jul 16, 2025

லண்டன், போன்ஹாம்ஸில் ( Bonhams) நடந்த இணையவழி ஏலத்தில், காந்தி ஓவியம் 6 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. மகாத்மா காந்தி கடந்த 1931-ஆம் ஆண்டு 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார். அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார். இந்த ஓவியம் 1974

Read More
சிறிய நாடுகளுக்கு 10% வரி!!

சிறிய நாடுகளுக்கு 10% வரி!!

Jul 16, 2025

சிறிய நாடுகளில்  இருந்து  இறக்குமதி செய்யப்படும்  பொருட்களுக்கு 10% வரி  விதிக்க   அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்  திட்டமிட்டுள்ளார். இதன்படி கரீபியன், ஆபிரிக்க  நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

Read More
இந்தோனேஷியாவின் வரிகளை குறைத்தது அமெரிக்கா..!

இந்தோனேஷியாவின் வரிகளை குறைத்தது அமெரிக்கா..!

Jul 16, 2025

இந்தோனேஷியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தோனேஷிய இறக்குமதிகள் மீதான திட்டமிடப்பட்ட வரிகளை 32 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகக் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஈடாக, இந்தோனேஷிய சந்தைகளில் சுங்கவரி மற்றும் சுங்கவரி இல்லாத தடையற்ற அணுகலை அமெரிக்கா பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தோனேஷியா இது குறித்த அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல்களை இன்னும்

Read More
பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா – பாராட்டிய பிரதமர்..!

பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா – பாராட்டிய பிரதமர்..!

Jul 15, 2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடி,சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக தரையிறங்கியது குறித்து  பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விண்வெளிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் குரூப் கப்டன் சுபான்ஷு சுக்லாவை வரவேற்கும் நாட்டுடன் நானும் இணைகிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது அர்ப்பணிப்பு,

Read More