FIFA கிளப் அணிகளுக்கான 21ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டிக்கான இறுதிப்போட்டி நேற்றைய தினம் (13) நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பாரிஸ் செயிண்ட் (PSG) மற்றும் செல்சி (Chelsea FC) அணிகள் மோதின.
இறுதிப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செல்சி அணி பிபா க்ளப் உலக கோப்பை சம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்றது.







