Tamil News Channel

Gmailலில் மறைந்திருக்கும் சில இரகசியங்கள்..!

gm2

Gmail இன் அட்வான்ஸ்ட் Search ஒப்ஷன் , Google இல் பயன்படுத்துவதைப் போலவே இருக்கும். உங்களது Search விருப்பத்தை சிறியதாக்கி, எளிதாக ரிசல்ட் கிடைத்திட உதவியாக இருக்கும்.

நீங்கள் தேட விரும்பும் மெயிலை கண்டறிய, Search பொக்ஸில் சிம்பிளி கிவேர்ட் கொடுக்கலாம் அல்லது பில்டர் பட்டனை கிளிக் செய்து அட்வான்ஸூட் ஒப்ஷனில் எளிதாக கண்டறியலாம்.

குறிப்பிட்ட நபரின் மெயிலைக் கண்டறிய, அந்த நபரின் மெயில் ஐடியையும் டைப் செய்யலாம். அதுதவிர, அட்வான்ஸ் Search ஒப்ஷனில் சைஸ், திகதி, அட்டாச்மென்ட் இருக்கும் மெயில் அல்லது இல்லாத மெயில் என வகைப்படுத்தித் தேட முடியும்.

    2.Undo send

Gmailலில் நீங்கள் அனுப்பியதில் ஏதேனும் தவறு இருப்பதைக் கண்டறிந்தால், அதனை அனுப்பாமல் தடுக்கும் வசதியும் வழங்கியுள்ளது.

இது சிக்கலான செயன்முறை கிடையாது. நீங்கள் மெயிலில் Send பட்டன் கிளிக் செய்ததும், திரைக்கு கீழே Undo send பட்டன் தோன்றும்.

அந்த பட்டன் தோன்றும் நேரத்தை நீங்கள் நிர்வகிக்கலாம்.Gmailலில் settings இல் எவ்வளவு நேரம், மெயில் அனுப்பிய பின்பு அந்த பட்டன் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.

நீங்கள் மெயில் அனுப்பியதும், அந்த Undo பட்டனை கிளிக் செய்தால், மெயில் ரிட்டன் ஆகிவிடும்.

மேலும், திரையில் வேறு ஏதேனும் இடத்தில் கிளிக் செய்தால், அந்த undo பட்டன் தானாகவே செட் செய்து,டைம் லிமிட்டுக்கு முன்பு மறைந்துவிடும்.

   3.Confidential mode

Gmail Confidential mode என்பது, WhatsAppபில் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்பு மெசேஜ் மறைவது போலவே, மெயிலும் மறைந்துவிடும்.

நீங்கள் மெயில் அனுப்பத் தயாரானதும் Send பட்டன் இருக்கும் இடத்தில், lock and clock பட்டன் இருக்கும்.

அந்த பட்டனில் நீங்கள் மெயில் Delete ஆக வேண்டிய நேரத்தைத் தீர்மானிக்க முடியும்.

குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு, மெயில் அனுப்பியவரால் அதனைக் காண முடியாது. Contentsம் Save செய்திட முடியாது.

 4.Writing suggestions

ஜிமெயில் நீங்கள் டைப் செய்கையில், ஸ்மார்ட் கம்போஸ் அல்லது ரைட்டிங் பரிந்துரைகள் என்ற வசதிகள் மூலம், நீங்கள் விரைவாக டைப் செய்திட சில பொதுவான வாக்கியங்கள், பரிந்துரைகள் திரையில் தோன்றும்.

Gmail Settings இல் Smart Compose ஒப்ஷனைக் காணலாம். அதனை ஒன் செய்வதன் மூலம், எழுதுகையில் பரிந்துரைகளைக் காணலாம்.

உதாரணமாக, நீங்கள் Hope this என type செய்தால், அதன் பின்பு நீங்கள் டைப் செய்யவுள்ள வார்த்தையைக் கண்டறிந்து திரையில் காட்டும். அது சரியாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் Right arrow press செய்தால், தானாகவே நமது வார்த்தைக்கு அடுத்து வந்துவிடும்.

    5.Mute conversation

உங்களுக்கு சம்மந்தமில்லாத மெயில்கள் தொடர்ச்சியாக வருகிறது என்றால், அதனை மியுட் செய்திட முடியும்.

சம்மந்தப்பட்ட மெயிலை தெரிவு செய்து, இன்பொக்ஸ் பாரில் உள்ள, மூன்று டொட் மெனுவை கிளிக் செய்தால், மியுட் பட்டனைக் காண முடியும்.

அத்துடன், Mark as read, ‘Mark as important போன்ற ஒப்ஷன்களும் இடம்பெற்றிருக்கும்.

அதனையும் தேவையென்றால் தேர்வு செய்துகொள்ளலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts