இலங்கையில் HIV தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியாகப் பரவும் தொற்றுநோய்/எச்.ஐ.வி.யை தடுப்பதற்கான விழிப்புணர்வு திட்டம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் (ஜனவரி முதல் மார்ச் வரை) மொத்தம் 230 HIV வழக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும், 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் HIV தொடர்பான 10 இறப்புகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் பதிவான HIV தொற்றுகளின் ஆண்-பெண் விகிதம் 6.6:1 ஆக காணப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here