இந்தியாவில் HMPV வைரஸினால் 7 குழந்தைகள் பாதிப்பப்பட்டுள்ளனர். பெங்களூர் , நாக்பூர், தமிழ்நாட்டில் தலா இரண்டு குழந்தைகளுக்கும், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் ஒரு குழந்தைக்கும் HMPV வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் இந்தவைரஸ்த் தொற்றினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தியாவில் HMPV வைரஸினுடைய பாதிப்பு அதிகரித்து வந்தாலும் , கொரோனா போன்றதொரு நிலையை ஏற்படுத்தாது, எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியிருக்கிறார்.
பொதுவாகவே HMPV வைரஸின் பாதிப்புக்கு வைத்தியசாலையில் அனுமதித்துச் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இருக்காது.உரிய நேரத்தில் வைரஸ்த் தொற்றினைக் கண்டறிந்துவிட்டால் அதன் தீவிரத்தன்மையைக் கட்டுப்படுத்திவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய சுகாதாரத் துறையும் ,இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையமும், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையமும் இணைந்து நோய்ப் பரவலின் தன்மையைக் கண்காணித்து வருவதாக தமிழக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.