ஐ.சி.சி யின் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரராக தென்னாபிரிக்காவின் எய்டன் மார்க்ரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த வீரருக்கான பரிந்துரையில் இலங்கையின் பெத்தும் நிசங்கவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சிறந்த வீராங்கனையாக மே.இ. தீவுகளின் ஹேய்லி மேத்யூஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த விருதை பெறுவது 4ஆவது தடவையாகும்.



