Tamil News Channel

IPL இன் புதிய மாற்றங்கள்..!

இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இன்னும் சில நிமிடங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.

தொடக்க போட்டியில் நடப்பு சாம்பயின் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன.

சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐபிஎல் திருவிழாவை கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் இவ்வருடத்திற்கான ஐ.பி.எல் தொடரில் புதிய மாற்றங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி இவ்வருட ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் இரு பவுன்சர்கள் வீசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி கடைசி ஓவர்களை வீச வரும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதேபோல ஒரு பேட்ஸ்மேன் ஸ்டெம்பிங் ஆனாரா என மூன்றாவது நடுவர் முடிவு எடுக்கும்போது, முதலில் அவர் பிடி எடுக்கப்பட்டாரா என சரிபார்க்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை போல Wide, no ball போன்றவைகளையும் அணிகள் விமர்சனம் செய்யலாம் என்றும், ஓர் இன்னிங்ஸில் ஓர் அணிக்கு 2 Review வழங்கப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும், ஐசிசி புதிதாக அமல்படுத்தியுள்ள Stop Clock முறை ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடுத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts