பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ISS விண்வெளி நிறுவனம், இதனை பசுபிக் பெருங்கடலில் தள்ளப்போவதாக நாசா அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வௌியின் ஆயுட்காலம் முடிவடையவுள்ள நிலையில் அதனை அழிக்கும் நோக்கில், எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தமொன்றை போட்டுள்ளது.
அதன்படி இன்னும் 10 ஆண்டுகளில் எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.3இலட்சம் கிலோ எடையுள்ள விண்வெளி நிறுவனத்தை பசுபிக் கடலில் தள்ளக்கூடிய வாகனமொன்றை உருவாக்கவுள்ளது.
1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விண்வெளி நிலையம், 28ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் தொண்ணூறு நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றி வருகிறது.
இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில், சூரியன், பூமி ஆகியவற்றின் செயல்பாடுகள், குறுங்கோள் பற்றிய ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள அந்த விண்கலமானது, பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தும்.
பின்னர் குறித்த விண்கலனும் சர்வதேச விண்வெளி நிலையமும் வளிமண்டலத்தில் நுழையும்போது உடைந்து எரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆய்வாளர்களுக்கு இந்த விண்வெளி நிலையம் அடைக்கலம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.