Tamil News Channel

NPPயின் தேர்தல் பிரசார அலுவலகம் திறந்து வைப்பு..!

20250415_104524

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் பரந்தன் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன்,

கடந்த காலங்களில் அபிவிருத்தி ஒழுங்காக நடைபெறவில்லை இதனால் தான் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் 159ஆசனங்களை வழங்கினர்.கிளிநொச்சி யாழ் மக்கள் மூன்று ஆசனங்களை வழங்கியுள்ளனர்.

இந்த வருடம் வரவு செலவுத்திட்டம் மூலம் பல்வேறு அபிவிருத்தி செய்யவுள்ளோம்.

கடந்த ஆட்சியில் படம் காட்டுவதற்காக அபிவிருத்தி செய்வதாக காட்டினர் சமூக வலைத்தளங்களில்.

எனி வரும் காலங்களில் பலர் கைது செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்றம் எங்களிடம் உள்ளது பிரதேச சபைகளும் எமது கைகளுக்கு வரவேண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் பின்பு எப்.படி அபிவிருத்தி நடக்கிறது என்று பாருங்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தேர்தலில் தோற்றவர்கள் தற்போது எமது கட்சி இனவாத மதவாத கட்சி என்று குறிப்பிடுகின்றனர்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கேட்கின்றார்கள் தாங்கள் நிம்மதியாக வாழவேண்டும் எமது அரசாங்கத்தில் அது ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றார்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts