2025 ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி அணி சம்பியனான நிலையில் சந்தையில் அந்த அணியின் பிராண்ட் மதிப்பு தற்போது அதிகரித்துள்ளதாக முதலீட்டு வங்கி நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த அணியின் தற்போதைய பிராண்ட் மதிப்பு 269 மில்லியன் டொலராக உள்ளது. முன்பு முதலிடத்தில் இருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) இந்த முறை 235 மில்லியன் டொலர் மதிப்புடன் 3ஆம் இடத்துக்கு சறுக்கியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 242 மில்லியன் டொலர் மதிப்புடன் 2ஆவது இடத்தில் இருக்கிறது.

10 அணிகளிலும் அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸின் மதிப்பு இந்த ஆண்டு 39.6 சதவீதம் அதிகரித்து 141 மில்லியன் டொலராக உள்ளது. விளம்பரதாரர், ஊடகம், வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐபிஎல் போட்டியின் ஒட்டுமொத்த மதிப்பானது 12.9 சதவீதம் அதிகரித்து, தற்போது 18.5 பில்லியன் டொலராக உள்ளது. இதில் ஐபிஎல் என்ற பிராண்டுக்கான தனி மதிப்பு மட்டும் 13.8 சதவீதம் அதிகரித்து 3.9 பில்லியன் டொலராக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here