பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் காங்கிரஸ் (நிதாஹாச ஜனதா சபை) பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) உடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளது.
SJB உடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர் எம்.பி சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் பரந்த அரசியல் சக்தியின் ஊடாக ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரலில், பிரதான எதிர்க்கட்சி தலைமையிலான ‘சமகி ஜன சந்தானய’வை உருவாக்குவதற்கான முதல் படியாக, சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் குழுவுடன் SJB புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
SJB மற்றும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் 06 பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, கே.பி.குமாரசிறி, கலாநிதி உபுல் கலப்பத்தி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோருக்கு இடையில் புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.