எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சமகி ஜன பலவேகயவுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நேற்று (28) மாலை இடம்பெற்றது.
பூர்வாங்க முன்மொழிவுகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் முன்னோக்குகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து, நேற்றைய கலந்துரையாடலின் பெறுபேறுகள் தொடர்பில் இரு தரப்பினரும் இன்று (29) தமது கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ள அதேவேளை, SJB மற்றும் UNP ஆகிய கட்சிகளுக்கு இடையிலான மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் நாளை (30) இரவு நடைபெறவுள்ளது.