2024 இல் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, சிம்பாப்வே அணி 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச T20 போட்டிகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
அதனையடுத்து, டெஸ்ட், சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச T20 போட்டிகள் அடங்கிய தொடர்களில் கலந்து கொள்ளுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கும், அதைத் தொடர்ந்து இலங்கை அணி பங்களாதேஷூக்கும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளன.
அடுத்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள சர்வதேச T20 உலகக்கிண்ணத்திலும் இலங்கை அணி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட அணிகளுடன் இலங்கை அணி 7 தொடர்களில் பங்கேற்கவுள்ளது.
இலங்கை அணி அடுத்த ஆண்டு பங்கேற்கவுள்ள தொடர்களில் 6 தொடர்கள் சொந்த மண்ணிலும், 5 தொடர்கள் சுற்றுலா தொடர்களாகவும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.