T20 சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவான மேற்கிந்திய தீவுகள் அணி!
T20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று (13) இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
Taroubaயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.
Sherfane Rutherford ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களை அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பெற்றுக்கொடுத்தார்.
பின்னர் 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Glenn Phillips அதிகபட்சமாக 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய சுப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக மேற்கிந்திய தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளது.
![]()