வட்டுக்கோட்டை தொகுதியில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட அங்கஜன் இராமநாதன்..!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ் தேர்தல் மாவட்ட பிரதான வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் நேற்று 29/10/2024 வட்டுக்கோட்டை தொகுதியில் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டார். அராலி, சங்கரத்தை, சங்கானை, சுழிபுரம், மூளாய், தொல்புரம் கிராமங்களில் மக்கள் சந்திப்புகள் இடம்பெற்றன. சந்திப்புகளில் உரையாற்றிய அவர், இதுவரைகாலமும் தேர்தலுக்கு பின்னர் மக்களை சந்திக்காதவர்களால் இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் எந்தவித பிரயோசனமும்
யாழில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் உயிரிழப்பு!
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். ஜனநாயக தேசியக்கூட்டணியில் தபாற்பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும், உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவருமான இனியவன் என அழைக்கப்படும் செந்திவேல் தமிழினியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி
எம்.பிக்கள் வாக்களிப்பு..!
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பீ.திசாநாயக்க, 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார். ஹங்குராங்கெத்த ரிகல்லகஸ்கட – ஜெயபிம கனிஷ்ட பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது வாக்கினை செலுத்தினார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தனது வாக்கினை அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் இன்று காலை
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சாரதி துஸ்மந்த ஆகியோர் தங்களது ஆதரவை இன்று (23) ஜனாதிபதியைச் சந்தித்து வெளியிட்டுள்ளனர்.
வடக்கின் உயர் பொருளாதார திறனை வடக்கினதும் நாட்டினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்வோம்..!
புதிய பொருளாதார, அரசியல் முறைமையுடன் முன்னேறிச் செல்வதற்காக ஒன்றிணைவது கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்களின் பொறுப்பாகும். இனப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் – நல்லிணக்கமும் சமத்துவமும் மிக முக்கியமானவை. சிங்கள மொழியுடன் தமிழையும் ஊக்குவிக்க வேண்டும் – தமிழகத்தில் எற்படவிருக்கும் பொருளாதார வளர்ச்சியினால் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். யாழ்ப்பாணத்தில் கல்வியியலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு யாழ்ப்பாணம் உள்ளிட்ட
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையான விசேட சந்திப்பு இடம்பெற்றது..!
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், யாழ் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாகவும் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் பல கோரிக்கைகளை அங்கஜன் இராநாதன் அவர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தார். நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் அவர்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு மாகாணம் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை மையப்படுத்திய
நாடு முழுவதும் 1250 சணச சங்கங்களை முன்னேற்றுவதனனூடாக 5000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய நிகழ்ச்சி திட்டம் !
நாடு முழுவதும் 1250 சணச சங்கங்களை முன்னேற்றுவதனனூடாக 5000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய நிகழ்ச்சி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் முன்னெடுக்கப்பட்டது. இதனூடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 350 கிராமங்களை அபிவிருத்தி செய்வதனூடாக வறுமையின் பிடியிலுள்ள மக்களை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனூடாக கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து கொள்ள
பிரதமர் தினேஷ் குணவர்தன வட மாகாணத்திற்கு விஜயம்..!
வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற தற்காலிக பணியாளர்களுக்கான நிரந்தர நியமனமங்களை பிரதமர் தினேஷ் குணவர்த்தன நேற்று யாழ்ப்பாணத்தில் வழங்கி வைத்தார். வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களிலே தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்த 175 பேருக்கான நியமனங்களை நேற்றைய தினம் பிரதமர் யாழ்ப்பாண பொது நூலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், வடக்கு
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமயில்!
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.07.2024) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் முரளிதரனால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ். மாவட்ட
தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். அத்துடன் கடந்த 2020