Monday, March 16, 2026
No menu items!

அரச ஊழியர்கள்

அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையைக் கருத்திற் கொண்டு பல்வேறு அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து சுகாதார ஊழியர்களும் நோயாளிகளின் பராமரிப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில் தங்கள் விடுமுறையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், காவல்துறை அதிகாரிகளுக்கான விடுமுறையும்...

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜனவரியில் அமுல்!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி சம்பள உயர்வை வழங்குவார் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 25 பேருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பேருந்து நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிக...

தூய்மையான இலங்கை என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி !

தூய்மையான இலங்கை என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதயில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுற்றுச் சூழலை இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளன. அனைவருக்கும் சமமாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நிறுத்தப்பட்டுள்ள...

அரச அதிகாரிகள் இனி அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாக மாட்டார்கள்; ஜனாதிபதி!

திறமையான, குடிமக்களை மையமாகக் கொண்ட அரச சேவையை உருவாக்குவதற்கு தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தினார். கடந்த ஆட்சியில் இருந்ததைப் போலன்றி, மக்கள் நலனுக்காகச் செயல்படும் அரசு அதிகாரிகள் இனி அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாக மாட்டார்கள் என்று அவர் வலியுறுத்தினார். இன்று (03.10) முற்பகல் விவசாயம், காணி, கால்நடை,...

வவுனியா மாவட்டத்தின் வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு!

நாளைஇடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை காலை இடம்பெறவுள்ளது. அந்தவகையில் வவுனியாமாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் எடுத்துசெல்லப்பட்டுள்ளது. வவுனியாமாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்தியநிலையமாக செயற்ப்பட்டுவரும் சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள்...

ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ள வாகன உரிமங்கள்!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 75,000 உரிமங்கள் ஐந்து வருடங்களாக தேக்கமடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நியமன உறுப்பினர் வஜிர அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிதியமைச்சு ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின்...

தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல்..!

இந்த ஆண்டு தேர்தல் கடமைகளுக்காக 200,000 முதல் 225,000 வரையிலான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி...
- Advertisement -spot_img
Verified by MonsterInsights