வீதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!
கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இன்று (02) காலை இடம்பெற்றதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதான போக்குவரத்து பாதைகளில் மாற்றம்..!
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடன்வல சுவர்ண வாலுகாராம விகாரையில் வருடாந்திர எசல பெரஹெர ஊர்வலம் இன்று (19) இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை நடைபெற உள்ளது. ஊர்வலம் ஸ்வர்ண வாலுகாராம விகாரைக்கு அருகில் இருந்து தொடங்கி, கரவனெல்லவிலிருந்து கேகாலை கரவனெல்ல வீதி வழியாக பயணித்து, ருவன்வெல்ல ராஜசிங்க கல்லூரிக்கு எதிரே இருந்து திரும்பி, அதே
கொஸ்கமவில் துப்பாக்கிச் சூடு: 12 வயது சிறுமி உட்பட மூவர் காயம்!
கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் நேற்று (6) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பிஸ்டல் வகை ஆயுதத்தைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, பாதிக்கப்பட்டவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்ததாக அவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் அவிசாவளையைச் சேர்ந்த 30
மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து விபத்து; 15 பேர் காயம் – 10 வாகனங்கள் சேதம்!
மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை பகுதியில் விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் 10 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொனராகலைலிருந்து கொழும்பை நோக்கி பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒருகொடவத்தையில் சாலையோரம் தொடராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்கள் மீது பின்புறமாக மோதியதால்
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த பேருந்து விபத்து!
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அவிசாவளை டிப்போ பேருந்தொன்று விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் இன்று (02) காலை 8.30 மணியளவில் விபத்துக்குள்ளானதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாரே விபத்துக்கு காரணம் என நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து செங்குத்தான சரிவில் மோதி விபத்துக்குள்ளானதோடு, விபத்து நடந்த நேரத்தில் சுமார் 20
ரயில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து ; இருவர் பலி!
இன்று (12) காலை அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், கொஸ்கம, அளுத்தம்பலம் ரயில் கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் கடவை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டி ரயிலில் மோதியதில், முச்சக்கர வண்டியின் இயந்திரம் கழன்று பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி
சூரியன் நேரடியாக உச்சம் தரும் நகரங்கள்; வானிலை ஆய்வுத் துறை அறிவிப்பு!
இன்று பிற்பகல் 12:12 மணியளவில் இலங்கையின் ஆறு (06) நகரங்களுக்கு மேல் சூரியன் நேரடியாக உச்சம் தரும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று சூரியன் தலைக்கு மேலே உச்சம் தரும் இலங்கைக்கு மிக அருகில் உள்ள பகுதிகள் கொழும்பு, அவிசாவளை, தலவாக்கலை, திம்புல, கலகும்புர மற்றும் தம்பகல்ல ஆகும். சூரியனின் வடக்கு நோக்கிய ஒப்பீட்டு இயக்கம்
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!
அவிசாவளை வித்தியால மாவத்தையில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் தங்கியிருந்த இளைஞன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞனுக்கும், நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை தங்குமிடத்தில் தங்கியிருந்த இளைஞர்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்தக் கொலைச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவிசாவளை தலைமையக பொலிஸ் நிலைய சிரேஷ்ட அதிகாரி
ஹோமாகம நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் பலி!
கொழும்பு – அவிசாவளை வீதியில் ஹோமாகம நகரத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்
கொழும்பு – இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி…!
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு, இரத்தினபுரி வீதியின் நாவெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரியில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பின்னால் பயணித்த நபர் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்தில் 34 வயதுடைய