ஜனாதிபதியை சந்திக்கவுள்ள இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர்..!!
இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இன்று (23) முற்பகல் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
இந்திய வீராங்கனைகளுக்கு சம்பள உயர்வு..!!
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீராங்கனைகளுக்கான கட்டணம் 2.5 மடங்காக உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் பல நாள் போட்டி தொடரில் விளையாடும் சிரேஸ்ட வீராங்கனைகளுக்கு
அனர்த்த உதவியாக இரண்டு கள மருத்துவமனைகள்-70க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவப் படையினர் இலங்கையில்..!!
‘டிட்வா’ சூறாவளியால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்களுக்குச் சிகிச்சையளிக்கும் நோக்கில், 70 இற்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மருத்துவ மற்றும் துணைப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய வாகனங்களுடன் கூடிய இந்திய விமானப்படையின் பாரிய C-17 ரக விமானம் நேற்று (மாலை) கொழும்பில் தரையிறங்கியது. இந்தியா வழங்கியுள்ள விரைவாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டு கள மருத்துவமனைகளின் (Field Hospitals) முதல் பகுதியாக, இந்தப் படையினர்
2026 T20 உலகக்கோப்பை: பெப்ரவரி 7 முதல் ஆரம்பம்!
10-வது ஐசிசி ஆண்கள் இருபதுக்கு 20 (T20) உலகக்கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளன. இத்தொடர் 2026 பெப்ரவரி 7 முதல் 29 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சம்பியனான இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை மும்பையில் எதிர்கொள்கிறது. தொடக்க நாளில் இந்தியா உட்பட ஆறு அணிகள் களமிறங்கும். குழு
ஜீவன் தொண்டமானின் திருமணத்தில் பங்கேற்க இந்தியா பயணமாகும் ரணில் விக்ரமசிங்க!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியா பயணமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.தே.கவின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் மேலும்,
எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு விஜயம்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்குப் புறப்பட்டார். இந்த விஜயத்தின் போது அவர் பல அரசு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மையப்படுத்திய கலந்துரையாடல்கள் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சஜித் பிரேமதாச இந்தியாவில் நடைபெறும் பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன், சில முக்கிய அரசியல்
தெலுங்கானாவில் பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து- 20 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், பேருந்தொன்றும் டிப்பர் ரக லாரியும் மோதியதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததுடன், பலர் தீவிர காயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்தில் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது. நேரில் கண்ட சாட்சிகளின் தகவலின்படி, டிப்பர் வாகனம் பேருந்துடன் மோதியபோது
ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்பில் வெளியான தகவல்..!!
இந்திய ஒருநாள் அணியின் துணைதலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் சிட்னி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இந்தியா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமீபத்தில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையில் ஒக்டோபர் 25 ஆம் திகதி நடைபெற்ற கடைசிப் போட்டியின்போது, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பிடிக்க பாய்ந்து சென்ற இந்திய அணியின் துணை தலைவர்
நீரில் அடித்துச் செல்லப்பட்டு நான்கு பெண்கள் பலி..!!
தமிழகத்தில் கடலில் குளிக்கச் சென்ற இலங்கை பெண் உட்பட்ட நான்கு பெண்கள் பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எண்ணூர் அருகே கடலில் நேற்று(31) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அலையால் அடித்துச்செல்லப்பட்ட பின்னர் குறித்த பெண்களின் உடல்கள் அனைத்தும் அதே இடத்தில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 17 முதல்
ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கிப் பயணித்த பேருந்தில் தீ விபத்து – 25 பேர் பலி!
இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, வழியிலே ஒரு உந்துருளியுடன் (lorry) மோதியதில் ஏற்பட்ட தீப்பரவலில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீப்பரவலில் சிலர் கடுமையான தீக்காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து