இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளியாக பணிபுரிந்த இலங்கையர் கொலை — அதிகாரிகள் விசாரணை தீவிரம்!
இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்த ஒரு இலங்கையர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார். காலியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒருவரால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்தான் இஸ்ரேலுக்கு சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் காவல்துறை
ட்ரம்ப் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய கிழக்குக்கு நோக்கி பயணம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சபாநாயகர் அமீர் ஓஹானாவின் அழைப்பின்பேரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மத்திய கிழக்கு நாடுகள் பயணிக்கிறார். அவர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். இந்த உரை 2008க்குப் பின்னர் ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஆற்றும் முதல் உரையாகும்.
இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான காசா சமாதானத் திட்டத்தின் முதற்கட்டத்தில் ஒப்பந்தம் — டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான காசா சமாதானத் திட்டத்தின் முதற்கட்டம் தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவர் இதனை “உலகத்திற்கே ஒரு சிறந்த நாள்” என்று வர்ணித்ததுடன், காசா பகுதிக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “நான் அதைப் பரிசீலிக்கிறேன்,” என ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது பேச்சுவார்த்தைகள் எகிப்தில்
இஸ்ரேல்-காசா போர் விரைவில் முடிவடையலாம் – டொனால்ட் ட்ரம்ப்!
இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். போர்நிறுத்தத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்ட 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை ட்ரம்ப் வெளியிட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் டொனால்ட் ட்ரம்பும் இடையே முக்கிய
துப்பாக்கிச் சூட்டால் பலியாகும் சிறார்கள்..!!
காசாவில் சிறுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் வந்தவண்ணமே உள்ளன. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த குற்றத்தைப் புரிவதாக பலஸ்தீன தரப்பு தெரிவிக்கிறது. ஆய்வுகளின் தொகுப்பில் 95 சிறுவர்கள் அவ்வாறு இறந்துள்ளதாகக் சர்வதேச ஊடக நிறுவனமான பிபிசி வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் சுடப்படுவது பற்றிக் காசாவில் உள்ள மருத்துவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாகக் சிறுவர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் தடை
20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ விபத்து..!!
இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிபுரியும் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற நிறுவனத்தின் போக்குவரத்து பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பேருந்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அதில் பயணித்தவர்கள் ஜன்னல்களை உடைத்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அசம்பாவிதங்கள் எவையும் பதிவு செய்யப்படாத நிலையில், ஜன்னலில் இருந்து குதிக்கும் போது விழுந்து முழங்காலில் காயமடைந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடுகளின் தலைவர்களுக்கு விருந்தளித்த ட்ரம்ப்..!!
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்-காஸா போர், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் போன்றவற்றால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து
காஸாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: 20 சிறார்கள் உட்பட 34 பேர் உயிரிழப்பு !
காஸாவில் இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் ஏவுகணை தாக்குதலில் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 சிறார்கள் அடங்குவதாக, காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப பிரச்சினையே, இந்த ஏவுகணை தாக்குதலுக்கு காரணம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. ஏதிலிகள் தங்கியிருந்த முகாமுக்கான நீர் விநியோக பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், காசா மீது மீண்டும் போர் நடத்தும் – பெஞ்சமின் நெதன்யாகு!!
60 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இஸ்ரேல், காசா மீது மீண்டும் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாகப் போர் இடம்பெற்று வருகிறது. இந்தநிலையில், ஹமாஸ் உடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு ஒப்பந்தம்
உதவிக்காக காத்திருந்த மக்களும் இப்போது இலக்காகின்றனர்: காசா மீதான தாக்குதலில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரிப்பு!
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில், உதவிக்காக காத்திருந்த பலர் உயிரிழக்கின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்காலிக உதவி முகாம்கள் மற்றும் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களில், அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் நேரடி துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சுக்களில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இன்று மட்டுமே குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா