Monday, March 16, 2026
No menu items!

உத்தியோகபூர்வ விஜயம்

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாளை(06) வருகைதரும், சமந்தா ஜாய் மோஸ்டின் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த அரசமுறை விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில்...

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மனிக்குப் பயணமாகியுள்ளார். ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வோல்டரின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்துள்ளது. இன்று (11) முதல் ஜூன் 13 வரை இடம்பெறும் இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி, ஜேர்மனியின் ஜனாதிபதி, பெடரல் அரசின் முதலமைச்சர்கள் மற்றும் பிற உயர்மட்ட பிரதிநிதிகளைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில்...

நியூசிலாந்து பிரதிப் பிரதமருக்கும்   சஜித் பிரேமதாசவுக்கும் இடையே சந்திப்பு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பு நேற்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ், பிரதி அமைச்சரும், வெளிவிவகார அமைச்சரின் சிரேஷ்ட...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த தென் கொரிய கடற்படை கப்பல்!

தென் கொரிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நேற்றையதினம் வருகைதந்த குறித்த கப்பலைக் கடற்படை மரபுகளின் படி இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். 149.5 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பல், 262 பணியாளர்களைக் கொண்டுள்ளது. கப்பலில் வருகை தந்தவர்கள் நாட்டின் சுற்றுலா தளங்களைப் பார்வையிடவுள்ளதுடன், நாளையதினம் குறித்த கப்பல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் இன்று!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், ஏனைய பல...

நாட்டை வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான கப்பல்!

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான 'PNS ASLAT' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக நேற்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுக்கமைய கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'PNS ASLAT' என்ற போர்க்கப்பல் 123 மீற்றர் நீளமும், மொத்தம் 243 நிர்வாகக் குழுவினரையும் கொண்டது. மேலும், 'PNS ASLAT' என்ற கப்பல் நாட்டில்...

சீன முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின்  (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (16) காலை அரச மற்றும் தனியார் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட "Invest in Sri Lanka- Round table meeting 2025" முதலீட்டு அமர்வில் கலந்து கொண்டார். இவ் அமர்வில் சீனாவின்...

சீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ள இலங்கை ஜனாதிபதி!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (15) பிற்பகல் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் சந்திக்கவுள்ளார். ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கும் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடலைத் தொடர்ந்து பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு செல்ல உள்ள வெளியுறவு செயலாளர்!

காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக லண்டனில் உள்ள மார்ல்பரோ ஹவுஸில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன 2024 செப்டம்பர் 02-06 வரை ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். தனது விஜயத்தின் போது, ​​வெளிவிவகார செயலாளர், வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் உயர் அதிகாரிகளையும்...

மலேசிய பாராளுமன்றத்திலிருந்து செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பு…!!

மலேசியா பாராளுமன்றத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு டட்டுக் ஸ்ரீ சரவணன் முருகனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூவின மக்கள் வாழும் நாடான இலங்கையில், மூவின மக்களுக்கும் பாரபட்சம் இன்றி சிறந்த தலைமைத்துவத்தை வழங்கும் தலைவர் என்ற ரீதியில் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இந்த விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மலேசியா பல்லின மக்கள்...
- Advertisement -spot_img

Latest News

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி...
- Advertisement -spot_img
Verified by MonsterInsights