யாழில் மூன்று உந்துருளிகளும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்து!

யாழில் மூன்று உந்துருளிகளும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்து!

Sep 10, 2025

யாழ்ப்பாணம் – மருதனார்மடம், காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் மூன்று உந்துருளிகளும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, பின்பக்கமாக வந்த உந்துருளியுடன் மோதியது. பின்னர் அந்த உந்துருளி நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று

Read More
மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு!

மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு!

Sep 3, 2025

மாளிகாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை காவல்நிலையத்துக்கு அருகிலுள்ள முச்சக்கர வண்டி உதிரிபாக விற்பனை நிலையமொன்றில் பணிபுரிந்துவந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். உந்துருளியில் பிரவேசித்த இருவரால் ரீ 56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Read More
ஹட்டன் – கொழும்பு வீதியில் பாரவூர்தி மோதி பெண் உயிரிழப்பு!

ஹட்டன் – கொழும்பு வீதியில் பாரவூர்தி மோதி பெண் உயிரிழப்பு!

Jul 31, 2025

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மில்லகஹமுல்ல பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 5.30 மணியளவில், கொழும்பிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற உந்துருளி, அதே திசையில் பயணித்த பாரவூர்தியை முந்தச் செல்ல முயன்றபோது விபத்து இடம்பெற்றது. விபத்தில், உந்துருளியின் பின் இருக்கையில் பயணித்த 44 வயதுடைய இரண்டு

Read More
பொரளையில் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது!

பொரளையில் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது!

Jul 31, 2025

பொரளை பகுதியில், 1.1 கிலோகிராம் ஐஸ் வகை போதைப்பொருளும், 125 கிராம் ஹெரோயினும் வைத்திருந்த 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட உந்துருளி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More
நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு!

நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு!

Jul 3, 2025

நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய, மொரவல பகுதியில் இன்று (03) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More
இந்த வருடத்தில் 43 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!

இந்த வருடத்தில் 43 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!

May 9, 2025

கொட்டாவ – மாலபல்ல விகாரை வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். உந்துருளியில் பிரவேசித்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை

Read More
ஸ்வீடன் நாட்டில் துப்பாக்கிச் சூடு; 3 பேர் பலி!

ஸ்வீடன் நாட்டில் துப்பாக்கிச் சூடு; 3 பேர் பலி!

Apr 30, 2025

ஸ்வீடன் நாட்டின் உப்சாலா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். நகர மத்தியில் உள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. உந்துருளியில் பிரவேசித்த ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வசந்த கால விழா ஆரம்பமாவதற்கு முன்னதாக இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், மேலதிக

Read More
பாணந்துறை – ஹிரண பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!

பாணந்துறை – ஹிரண பகுதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!

Apr 29, 2025

பாணந்துறை – ஹிரண பகுதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, உந்துருளியில் பிரவேசித்த இரண்டு அடையாளந்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மேற்கு மாலமுல்ல

Read More
 உந்துருளியில் பயணித்த ஒருவர் யானையுடன் மோதி உயிரிழப்பு!

 உந்துருளியில் பயணித்த ஒருவர் யானையுடன் மோதி உயிரிழப்பு!

Apr 15, 2025

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் கன்னியா பகுதியில் உந்துருளியில் பயணித்த ஒருவர் யானையுடன் மோதுண்டு உயிரிழந்தார். வவுனியா – புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது.  

Read More
தடுப்பு சுவரில் மோதி உந்துருளி விபத்து; ஒருவர் பலி!

தடுப்பு சுவரில் மோதி உந்துருளி விபத்து; ஒருவர் பலி!

Mar 26, 2025

எத்திமலே காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை 05 அஞ்சல் பகுதியில் வத்தேகம தபால் நிலையம் நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி சாரதி எத்திமலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொட்டியாகலை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் எனத்

Read More