போம்புரு எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் விபத்து!
போம்புரு எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. களுத்துறையிலிருந்து பயணித்த வேன் ஒன்று வீதியில் குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 15 பேர் கொண்ட குழுவுடன் போம்புரு எல்ல நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது வேனில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்
குளவிக் கொட்டிற்கு இலக்கான வெளிநாட்டு பிரஜைகள்..!
ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் குளவிக் கொட்டிற்கு இலக்காகி தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை (25) தெமோதரை, எல்ல பகுதியில் உள்ள 9 – வளைவு பாலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே குளவிக் கொட்டிற்கு இலக்கானதாக எல்ல பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குளவி கொட்டிற்கு இலக்கான சுற்றுலாப் பயணிகள் இருவரும்
லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!
பதுளை – பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (12) பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய, கல்போக்க, பெரகெட்டியவைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் லொறியில் மோதி மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு
எல்ல, வெலிகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து எல்ல, வெலிகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. வெலிகம உட்பட தென் மாகாணத்தின் பல பகுதிகளிலும், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் எல்ல மற்றும் கொழும்பு பகுதிகளிலும் ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி நிஹால்
பதுளையில் பேரூந்து விபத்து; ஐந்து பேர் காயம்…!
பதுளை, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெத்தேவெலவிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த சுவரில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும், விபத்தின் போது பேரூந்தில் 18 பேர் பயணித்துள்ளதோடு அவர்களில் ஐந்து பேர்
போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் கைது…!
1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தனது சகோதரிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் போர்வையில் போதைப்பொருளை பார்சல் செய்து விநியோகித்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மவுண்ட் பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பண்டாரவளை, ஹப்புத்தளை, வெலிமடை,
தீப்பற்றி எரிந்த அமைச்சரின் வாகனம்..!
பண்டாரவளை – ஹல்பே பிரதேசத்தில் இன்று (16) அதிகாலை 12.45 அளவில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த வாகனம் இயந்திரக் கோளாறு காரணமாக தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரவளை மாநகர தீயணைப்புத் திணைக்களம், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதன்போது அவரது வாகனம் பலத்த சேதம்