இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு அரச விஜயம் – இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவிற்கும் (Dr Mohamed Muizzu) இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நேற்று (28) பிற்பகல் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றன. மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மகத்தான வரவேற்பளித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விருந்தினர் புத்தகத்தில்
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்காக தமிழ் மக்கள் கூட்டணியுடன் தமிழரசுக் கட்சி ஒப்பந்தம்!
உள்ளூராட்சி மன்ற சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணிக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையே நேற்றைய தினம் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. சீ.வி.விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற இந்த
நிதியுதவி வழங்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!
நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கட்டுநாயக்க, பியகம, சீதாவக மற்றும் வத்துபிடிவலை தொழில்துறை வலயங்களுக்கு 12 செட் உபகரணங்களை கொள்வனவு செய்ய 300 மில்லியன் ஜப்பானிய யென்னை (தோராயமாக LKR 590 மில்லியன்) நிதியுதவி வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பான ஒப்பந்தம் நேற்று (20/03/2025) கைச்சாத்திடப்பட்டது. இலங்கை முதலீட்டு சபை (BOI) யின் கீழ் செயல்படும்
காற்றாலை மின் திட்டத்தை மேம்படுத்த அரசாங்க அமைச்சரவை அனுமதி..!
மன்னாரில் 50 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெடுக்கு ஒப்பந்தம் வழங்க அரசாங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த முடிவு, கொள்முதல் முறையீட்டு சபையின் (PAB) மேற்பார்வையில் நடத்தப்பட்ட விரிவான மற்றும் வெளிப்படையான முறையீட்டு செயல்முறைக்குப் பின்னர் எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பம் திட்டக் குழுவால் பரிசீலிக்கப்படவில்லை.
அதானி குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததா இலங்கை?
இந்தியாவின் அதானி குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதானி குழுமத்துடனான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை இலங்கை இரத்து செய்துள்ளதாக எகனொமிக் டைம்ஸ் செய்திகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸவை எமது செய்திச் சேவை தொடர்பு கொண்டு வினவியபோது, குறித்த
இ.போ.ச சாரதி, நடத்துனர்களுக்கு நிரந்தர நியமனம்!!!
இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் 1,000 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து டிப்போக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தேவையான தகைமைகளைப் பெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இவ்வாறான நிரந்தர நியமனங்கள்