Monday, June 8, 2026
No menu items!

கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழந்தையைப் பிரசவித்த பெண்..!!

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், விமான நிலையத்திற்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவர் 29 வயதுடைய தான்சானிய நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் டுபாயிலிருந்து ஃபிட்ஸ் எயார் (FitsAir) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், அங்கிருந்து மீண்டும் மலேசியாவின் கோலாலம்பூருக்குச்...

சீனாவிலிருந்து நாடு  திரும்பிய பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற “பெண்கள் தொடர்பான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாடு 2025” இல் பங்கேற்றபின், இன்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கை திரும்பியுள்ளார். இந்த உச்சி மாநாட்டிற்காக பிரதமர் கடந்த அக்டோபர் 11 ஆம் திகதி இரவு நாட்டை விட்டு புறப்பட்டு சென்றிருந்தார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 சட்டவிரோத பாம்புகள் மீட்பு – பெண் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனையில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தின் பசுமை...

விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பட்டம் பறக்கவிடுவதற்கு தடை..!!

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவித்தலைப் புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். "விமான நிலையத்தைச் சுற்றி பட்டம் பறப்பது விமானங்களுக்கும் பயணிகளின் உயிருக்கும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, விமான நிலையத்தைச்...

அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் உட்பட 15 பேர் கொண்ட குழு இலங்கைக்கு விஜயம்!

அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் உட்பட 15 பேர் கொண்ட குழு நேற்று (02) இரவு அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை வரவேற்க பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர்...

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கைது..!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 34 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (4/15/2025) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஆவர். சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய...

இலங்கைக்கு போதைபொருட்களை கடத்த முயன்ற 4 சந்தேக நபர்கள் கைது!

இலங்கைக்கு குஷ் கஞ்சா மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை கடத்த முயன்ற நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் உள்ள சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், போதைப்பொருளை வைத்திருந்ததற்காக மூன்று சந்தேக நபர்களையும், அவற்றிற்கு உதவியதற்காக ஒரு சந்தேக நபரையும் கைது செய்தனர். ஒரு சந்தேக நபரிடம் 491 கிராம்...

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கைது..!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (11/04/2025) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய வர்த்தகர் ஆவார். சந்தேக நபரான வர்த்தகர் துபாயிலிருந்து...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் மடக்கி பிடிப்பு…!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பகுதியில் கடமையில் இருந்த அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (09/04/2025) இரவு இந்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் இரத்மலானை பகுதியை சேர்ந்த 41 வயதுடையவர் என...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது !

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் நேற்று இரவு 1.48 கிராம் குஷ் கஞ்சா, 2.44 கிராம் ஐஸ் மற்றும் 190 மி.கி ஹெராயினுடன் கைது செய்யப்பட்டார். விமான நிலையத்தில் உள்ள போலீஸ் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளின்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img