2026ம் ஆண்டிற்கான தரம் 6 மாணவர் சேர்க்கை – பாடசாலை வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2026ம் ஆண்டிற்கான தரம் 6 மாணவர் சேர்க்கை – பாடசாலை வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

Nov 21, 2025

தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டில் தரம் 6 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான பாடசாலை வெட்டுப் புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட வெட்டுப் புள்ளிகளை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.moe.gov.lk மூலம் பார்வையிடலாம் என்று அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு கிடைத்த பாடசாலை நியமனத்தைச் சரிபார்ப்பதற்காக, https://g6application.moe.gov.lk

Read More
பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளையுடன் நிறைவு!

பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளையுடன் நிறைவு!

Nov 6, 2025

அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) நிறைவடைகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகும். அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24ஆம் திகதி தொடங்கும் எனவும்

Read More
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் விரைவில் வெளியீடு!

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் விரைவில் வெளியீடு!

Oct 24, 2025

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பை கல்வி அமைச்சு நேற்று (23) வெளியிட்டுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் மற்றும் கூடுதல் வழிகாட்டல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம் 2026 ஆம் ஆண்டுக்குள் முழுமையான கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு

Read More
பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு – போக்குவரத்து ஏற்பாடுகள் மீளாய்வு !

பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு – போக்குவரத்து ஏற்பாடுகள் மீளாய்வு !

Oct 13, 2025

வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1 முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் தொடர்பாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட

Read More
2026 ஆம் ஆண்டின் முதலாம் தரம் கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 20 முதல் தொடங்குகிறது!

2026 ஆம் ஆண்டின் முதலாம் தரம் கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 20 முதல் தொடங்குகிறது!

Oct 9, 2025

கல்வி அமைச்சு அறிவிப்பின்படி, 2026 ஆம் ஆண்டின் முதலாம் தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஜனவரி 20, 2026 முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. அந்த நாளுக்குள், தரம் ஒன்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்பட வேண்டும். நிகழ்வின் வரவேற்பு நிகழ்ச்சி விவரங்களாக; தரம் இரண்டைச் சேர்ந்த மாணவர்கள் புதிய மாணவர்களை வரவேற்பர். பெற்றோர் மற்றும் விருந்தினர்கள் வரவேற்பு, தேசிய

Read More
ஆசிரியர் சேவைக்கு பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பு!

ஆசிரியர் சேவைக்கு பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பு!

Oct 1, 2025

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஒரு முக்கியமான அறிவிப்பின் மூலம், பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான செயல்முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் படி, 2023 மார்ச் 25ஆம் திகதி நடைபெறவிருந்த போட்டி பரீட்சையைச் சுற்றி உயர் நீதிமன்றத்தில்

Read More
அரசுப் பாடசாலைகளில் போஷாக்கு உணவுத் திட்டம் – 2025 பாதீட்டில் 32 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

அரசுப் பாடசாலைகளில் போஷாக்கு உணவுத் திட்டம் – 2025 பாதீட்டில் 32 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

Sep 17, 2025

அரச பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுத் திட்டத்திற்காக 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் 32 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100 கல்வி வலயங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், 8,943 பாடசாலைகளில் கல்வி கற்கும் 1.4 மில்லியன் மாணவர்களுக்கு பயனளிக்கிறது. 2006 ஆம் ஆண்டு தேசிய திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், 100 மாணவர்களுக்குக் குறைவான

Read More
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்!

Sep 11, 2025

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து, இதற்கான சிறப்பு கூட்டுத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக, பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட பல விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன, இதனால் பல மாணவர்கள் 

Read More
உயர்தரப் பரீட்சை 2025 – விண்ணப்பத் திகதி ஆகஸ்ட் 12 வரை நீடிப்பு!

உயர்தரப் பரீட்சை 2025 – விண்ணப்பத் திகதி ஆகஸ்ட் 12 வரை நீடிப்பு!

Aug 8, 2025

2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். 2024 ஆம் ஆண்டு மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 2025 உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மற்றும் 2025 ஆம்

Read More
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

Aug 7, 2025

இந்த வருடத்திற்கான பாடசாலை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி, மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் முதல் கட்டம் இம்மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும்

Read More