குஷ் போதைப்பொருளுடன் 23 வயதுடைய வெளிநாட்டுப் பெண் கைது!
5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (16) இரவு சென்னையில் இருந்து வந்த 23 வயதுடைய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் பேங்கொக்கில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு வந்த பிறகு,
முள்ளியவளையில் பெண்ணின் தங்க சங்கிலியை பறித்த கொள்ளையர்கள்; ஊர்மக்களால் துரத்தி பிடிப்பு!
மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று முந்தினம் (15.07) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு – முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமை இரவு 7 மணியளவில் வீதியால் பயணித்தபோது, இனந்தெரியாத கொள்ளையர்கள் இருவர் குறித்த பெண்ணை வழிமறித்து
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 32 வயது நபர் ஒருவர் உயிரிழப்பு!
நிவிதிகல, தம்மோருவ சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 32 வயது நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொழம்பகம, நிவிதிகலவைச் சேர்ந்த இவர், மூன்று பேருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிவிதிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த 7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு- பொலிஸார் எச்சரிக்கை!
இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 2025.01.01 முதல் 2025.07.13
இந்த வருடம் இதுவரையில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன..!!!
2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களில் 48க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுகள் பாதாள உலகக் குழுக்களுக்கு
பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஓட்டுநர் கைது!
கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும், சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி ஓட்டுநரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர் தனியார் வாடகை வாகன சேவையின் ஓட்டுநர். கடந்த வாரத்தில் பெண் சட்டத்தரணி ஒருவர், குறித்த தனியார் நிறுவனத்தின் முச்சக்கர வண்டியை வாடகைக்காகப் பதிவு செய்து அழைத்தபோது, அதன் ஓட்டுநர், செயலியில் குறிப்பிடப்பட்ட தொலைபேசியில் அழைக்காமல், வேறு தொலைபேசி இலக்கத்தின்
மன்னார்-நானாட்டான் பிரதான வீதியில் கோர விபத்து; சிறுவன் பலி!
மன்னார்-நானாட்டான் பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில், மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை ,தாய்,மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு
சப்ரகமுவ மாகாணத்தில் விசேட சோதனை ;120 பேர் கைது!
சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று (6) முன்னெடுக்கப்பட்டது. எம்பிலிப்பிட்டிய, சீதாவகபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 19 பேரும் கைது
சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது!
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 3,200 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (07) அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கலேவெல பகுதியைச்
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது !
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். 2015 ஜனாதிபதி தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சோள விதைகள் விநியோகித்த சம்பவம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக வாக்குமூலம் அளிக்க வந்த அவர், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.