Monday, March 16, 2026
No menu items!

கொட்டாஞ்சேனை மாணவி

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்..!

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பாக, குறித்த மாணவியின் தாயார் நேற்று (22.05.2025) கொழும்பு நீதவான் நீதிமன்றின் மேலதிக நீதவான் முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார். இதன்போது, தமது மகள் கல்வி கற்று வந்த பாடசாலையின் கணிதபாட ஆசிரியரது துன்புறுத்தல் மற்றும் கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளரால் அவமானப்படுத்தப்பட்டமை போன்ற காரணங்களாலேயே...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரத்தில் இடம்பெறும் சதிகள்..!

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரத்தில் நீதியை கிடைக்க விடாமல் செய்யும் நோக்கில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாக யுனைட்டட் ஹியூமன் ரைட்ஸ் என்ற மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் பிரதீபா வர்ணகுலசூரிய குற்றம் சுமத்தியுள்ளார். ஊடக சந்திப்பொன்றில் இதனை தெரிவித்த அவர், திட்டமிட்ட வகையில், விசாரணைகளைக் குழப்புவதற்கான சதிகளில் இந்த தரப்பினர் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த...

மாணவியின் மரணத்துக்குக் காரணமான ஆசிரியர் எமக்கு வேண்டாம் – புத்தளத்தில் வெடித்த ஆர்ப்பாட்டம்!

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துக்குக் காரணமாகக் கருதப்படும் ஆசிரியர், புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் தங்களுடைய பாடசாலைக்கு வேண்டாமென்று அப்பாடசாலையின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாணவி கல்வி பயின்ற...

கொட்டாஞ்சேனை பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு – கொந்தளித்த முஜிபுர் எம்.பி!

கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் கொட்டாஞ்சேனை பிரத்தியேக வகுப்பின் ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (09) காலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேற்படி மாணவி தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டபோது கருத்து வெளியிட்ட முஜிபுர் எம்.பி...

கொட்டாஞ்சேனை மாணவி மனநோயாளியா? – சபையில் கொந்தளித்த மனோ கணேசன்!

கொட்டாஞ்சேனை மாணவி மனநோயாளி அல்லர் எனவும், அவ்வாறு கூறியமைக்காக மகளிர் விவகார அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தினார். மேலும், அந்த வார்த்தைப் பிரயோகத்தை நாடாளுமன்ற ஹன்சார்ட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். கொட்டாஞ்சேனை மாணவி குறித்து நேற்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மனோ கணேசன்...
- Advertisement -spot_img

Latest News

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி...
- Advertisement -spot_img
Verified by MonsterInsights