தொடருந்து மோதி காட்டு யானையொன்று பலி!!
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தொடருந்து மோதி இன்று அதிகாலை காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது. கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டள்ளது. அப்பகுதி மக்களின் கூற்றுப்படி, அதிகாலை 3 மணி முதல் யானை கிராமத்தில் சுற்றித் திரிந்து வருவதாகவும் அப்பகுதியில் உள்ள நெல் வயல்களுக்குள் நுழைந்து வருவதாகவும் அறியப்படுகிறது. யானை வந்தபோது வனஜீவராசிகள் பாதுகாப்பு
கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய 15 வயது சிறுவன் – வெள்ளை வேன் சம்பவம் அதிர்ச்சி!
கொழும்பு – கஹதுடுவ பகுதியின் 15 வயது சிறுவன் ஒருவர் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளை வேனில் கடத்தப்பட்ட குறித்த சிறுவன், இரத்தினபுரியில் வாகனத்திலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் 119 காவல்துறையின் அவசர பிரிவுக்கு மேற்கொள்ளப்பட்ட அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து, இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் குறித்த சிறுவனை காவல்துறையினர் தமது
T20 சர்வதேச தொடரின் தொடர் வெற்றியாளர்யார்? -இறுதி ஆட்டம் இன்று!!
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரின் தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.00 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. குறித்த சுற்றுப்பயணத்தில் முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 எனவும், ஒருநாள் சர்வதேச தொடரை 2-1 எனவும் இலங்கை அணி
நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி கொழும்பில் போராட்டம்..!!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இலங்கை இராணுவத்தால் fortfarande கைப்பற்றியுள்ள நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம் (15) கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கோத்தா வீதியில், “எமது பூர்வீக நிலங்களை மீள எமக்கே ஒப்படையுங்கள்” எனக் கோரி, பூர்வீக நில உரிமையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர்
வரலாற்று சாதனை படைத்த பங்குச் சந்தை!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. நேற்றைய (14) வர்த்தக நாள் முடிவில், 18,838.39 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண், இன்றைய (15) வர்த்தக நாள் ஆரம்பத்தில் வரலாற்றில் முதன்முறையாக 19 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. இன்றைய
மஹரகம – நாவின்ன பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: நால்வர் காயம்!
மஹரகம, நாவின்ன பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இச் சம்பவம் இன்று (14) காலை 6 மணியளவில் நாவின்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாவின்ன பேருந்து நிறுத்தத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைந்த பேருந்து, மஹரகமவிலிருந்து கொழும்பு நோக்கி
தபால் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகமான சம்பவம்!
காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றைய தினம் (11-07-2025) பயணித்த இரவு தபால் புகையிரதமானது, கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் விபத்திற்குள்ளாகியது. இதில், புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான கறுப்பையா ஐங்கரன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். மதுபோதையில் தடுமாறி விழுந்த நிலையில் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிக்கும் நிலையில்,
இன்றைய நாளுக்கான வானிலை!
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
உயர்ந்த நிலையை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை..!!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (11) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. இன்றைய (11) வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 18,541.26 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இன்று, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 379.77 அலகுகளாக பாரியளவு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் S&P
நிரம்பி வழியும் நாட்டின் சிறைச்சாலைகள்..!!
நாட்டின் சிறைச்சாலைகளில் 12,000 ஆம் கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அற்றில் 33,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திணைக்களத்தில் சிறைச்சாலை அதிகாரிகளின் பற்றாக்குறையும் இருப்பதாகக் கூறினார். சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) – சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க,