திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள கருத்தை அவர் மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
எதிர்கட்சி...
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"இங்கே அறிக்கைகள் வெளியிட வேண்டிய அவசியமில்லை. ஒரு ஊடக நிறுவனம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால், சட்ட...
திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி பொதிராஜ விஹாரையைச் சுற்றி நேற்று ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக காவல்துறையின் செயல்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இத்தகைய நடவடிக்கைகள் இனவெறி பதற்றங்களை தூண்டும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
அரசியலமைப்பின் 2ஆம் அதிகாரத்தை மேற்கோள் காட்டிய அவர்,
புத்தமதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் போதிலும் பிற மதங்களுக்கு...
2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டதாகவும், அதில் மக்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் நிவாரணங்களும் இல்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தனது வரவு செலவு திட்ட உரையை வழங்கியதைத் தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கும்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
இந்த விஜயத்தின் போது அவர் பல அரசு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மையப்படுத்திய கலந்துரையாடல்கள் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சஜித் பிரேமதாச இந்தியாவில் நடைபெறும் பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன், சில...
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜகத் விதான இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு களுத்துறை டிஐஜிக்கு ஐஜிபி அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
"வாகனத்தில்...
பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டு, எதிர்க்கட்சியினர் பேசும் போது ஒலிவாங்கிகள் துண்டிக்கப்படும் நிலைக்கு அரசாங்கம் சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார். மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதே எதிர்க்கட்சியின் கடமை என்றும், அதைத் தடுக்க முயல்வது கீழ்த்தரமான செயல் என்றும் அவர் விமர்சித்தார்.
அனுராதபுரம் மாவட்டத்தின் மதவாச்சி மற்றும் கெபித்திகொல்லாவைப் பிரதேசங்களை...
தனது கட்சியினரும், சில முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களும், இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருந்து ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சென்றிருந்த மூத்த அரசியல்வாதிகளிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.
அனைத்து எதிர்க்கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமையை வலியுறுத்திய ரணில் விக்ரமசிங்க,...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிறை வைத்தியசாலையில் சந்தித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) காலை சிறை வைத்தியசாலையில் அவரைச் சந்தித்து பார்வையிட்டார்.
விளக்கமறியல் உத்தரவின் பின்னர், ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) இரவு சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக, வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து சில குழுக்கள் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சில அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களும் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற, ருஹுணு பல்கலைக்கழக துணைவேந்தர் தர்ம கீர்த்தி ஸ்ரீ கலாநிதி அகுரெட்டியே நந்த நாயக்க தேரருக்கு மியன்மார்...