தொழுநோய் ஒழிப்பில் இலங்கையின் முயற்சிக்கு அரசு உறுதி – ஜனாதிபதி!
தொழுநோயின் அபாயத்தைக் குறைத்து, சிகிச்சை வசதிகளை மேம்படுத்தி, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் தேசிய தொழுநோய் மாநாடு இன்று (06) காலை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் தொழுநோய் பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்து
கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ள திரவத்தை குடித்ததால் மீனவர்கள் இருவர் பலி!
புத்தளம், நரகலிய பகுதியில் கடலில் மிதப்பதைக் கண்டெடுத்த போத்தலில் இருந்து திரவத்தை குடித்த இரண்டு மீனவர்கள் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் மீன்பிடி தொழிலை சேர்ந்த நான்கு பேர் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மீதமுள்ள இரண்டு மீனவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்
பாடசாலை ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஏழு மாணவர்கள் மருத்துவமனையில்!
தம்புள்ளையில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஏழு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள் மற்றும் இரண்டு பேர் சிறுமிகள் ஆவர். அவர்கள் தற்போது தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய பாடசாலை விடுமுறை நாட்களில், குறித்த
தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு!
கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் சனிக்கிழமை (27.09.2025) உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, கரூர் காவல்துறை த.வெ.க கரூர் மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், பவுன்குமார் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து;12 பேர் காயம்!
ரந்தெனிகல பிரதான பாதையில், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர். நேற்று (30/09) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறினால் பேருந்து பாதையை விட்டு விலகி பாதையோரப் பாறைக் கட்டில் மோதியுள்ளது. காயமடைந்த 12 பேர் கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கல்லீரல் பிரச்சினையினால் ஏற்படும் உயிராபத்து!
கல்லீரல் பிரச்சனைகள் 4 வகையாக பிரிக்கப்படுகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். ஃபேட்டி லிவர் – ஈரல் கொழுப்பு லிவர் ஹெபடைட்டிஸ் – ஈரல் வீக்கம் லிவர் சிரோசிஸ் – ஈரல் சுருங்குதல் லிவர் ஃபெயிலியர் – ஈரல் செயலிழத்தல் ஃபேட்டி லிவர் – ஈரல் கொழுப்பு கல்லீரல் கொழுப்பு நோய், இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.
உடுதும்பர பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய குடும்பத் தற்கொலை முயற்சி!
உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தாய் தற்போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அவரது கணவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் 12, 10 மற்றும்
ஹொரனை – இரத்தினபுரி வீதியில் கோரவிபத்து!
ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இன்று முற்பகல் நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் இடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
முச்சக்கர வண்டி–கார் மோதி விபத்து: 6 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காயம்!
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் நியூவெலிகம பகுதியில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று எதிர் திசையில் பயணித்த காருடன் மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று (12) காலை 8.15 மணியளவில் இந்த விபத்து
வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு நிலையம் அமைப்பதற்கான கலந்துரையாடல் !
உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்கான நிலையத்தை வடக்கில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (08.07.2025) நடைபெற்றது. இக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் உடனடியாக சிகிச்சை மற்றும்