மாவையின் மறைவுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்..!
மலையக தமிழ் மக்களுக்காக இ.தொ.காவுடன் இணைந்து குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராஜா என குறிப்பிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், அன்னாரின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும் என்றும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயற்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற
செந்தில் தொண்டமானின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி..!
இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சமூகத்தின் நல்வாழ்வைப் போன்று, பாவத்தின் இருளை அகற்றுவதே இயேசு கிறிஸ்து
மேல்மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதி ஒருவர் தேவை ; செந்தில் தொண்டமான்!
இலங்கையின் புதிய பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை சமகி ஜன பலவேகய (SJB) உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். முன்னாள் ஆளுநர், மலையக பெருந்தோட்ட மாவட்டங்கள் அனைத்திலும் தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்கள் தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்ய தவறியதாக
1,124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டம்…!
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக 1,124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை அம்மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் முதற்கட்டமாக திருகோணமலையில் 348 பாடசாலைகளுக்கு Solar Panel வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் மின்சார கட்டணம் செலுத்த இயலாத நிலையில் பல்வேறு பாடசாலைகள் காணப்படுவதாக ஆளுநர் செந்தில் தொண்டமானின்
திருகோணமலையில் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடல்….!!
தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் மாளிகையில் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பெருந்தோட்டத் தமிழர்களுக்கும் வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கும் இடையில் வலுவான நட்புறவை வளர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில்
ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்..!
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தமது நிரந்தர நியமனங்கள் குறித்து கடந்த கால ஆளுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவர்களால் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது நிரந்தர நியமனம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்!
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை (09) கோலாலம்பூரில் சந்தித்துக் கலந்துரையாடினார். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகனின் விசேட அழைப்பின் பேரில் உத்தியோகப்பூர்வ பயணமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்குச் சென்றார். மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான இருதரப்பு உறவுகளை
கதிர்காமம் காட்டுவழிப் பாத யாத்திரையினை ஆரம்பித்தனர் பக்தர்கள்…!
கதிர்காமம் முருகன் ஆலயத்தில் ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றம் நடைபெறவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (30.06) பாதயாத்திரையினை ஆரம்பித்துள்ளனர். பக்தர்களுக்காக லாகுகலை உகந்தை வன பாதையின் கதவானது, உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டினை தொடர்ந்து திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அம்பாறை மாவட்ட அரசாங்க
திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலா பயணி! -ஆளுநர் செந்தில் தொண்டமான் வழிகாட்டலில் மீட்பு நடவடிக்கை வெற்றி-
இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவேலி பிரதேச சபை,சுற்றுலாப் பணியகம் ஆகியவை மீட்பு பணி ஈடுபட ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டது.
நாய்களுக்கான பராமரிப்பு நிலையம் ; கிழக்கு மாகாணத்தில்!
கைவிடப்பட்ட நாய்களுக்கும் நாய்க்குட்டிகளுக்கும் ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில் வாகரையில் நாய் பராமரிப்பு நிலையமொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார். கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகும் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.