Tamil News Channel

Blog Post

Tamil News Channel >

இந்திய உயர்ஸ்தானிகருடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு..!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேற்று (12) சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது. இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் மேம்பாட்டிற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். மேலும் தமது சமூகத்திற்கான நீண்டகால நட்பு மற்றும் அர்ப்பணிப்புக்குகளுக்கு நன்றிகளை […]

Read More

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் – ஜனாதிபதிக்கு ஆலயம் கட்ட தயாராகும் ஜீவன்..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலும் 1000 ரூபாய் வேதனத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியினால் முடியுமாயின், அவருக்கு ஆலயம் கட்டுவதற்கும் தாம் தயாராகவுள்ளாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நோர்வூட் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தொடர்ந்தும் வேதனம் அதிகரிக்கப்படுவதை விடவும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வே அவசியமாகவுள்ளதெனவும், ஜீவன் தொண்டமான் கூறினார். இதனால் எதிர்கால சந்ததியினர் பயனடைவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Read More

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது – சுட்டிக்காட்டிய ஜீவன்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சில செயற்பாடுகள் வருத்தமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் நடைபெறும் சமய வழிபாட்டை தாம் வரவேற்பதாகவும் எனினும் குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்ட விடயம் வருத்தமளிப்பதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தேர்தலை முன்னிட்டு கல்வி ரீதியிலான செயற்பாடுகள்,பொருளாதார ரீதியான செயற்பாடுகள், காணி உரிமை தொடர்பிலான செயற்பாடுகள் ஆகியவற்றைத் தடைசெய்யும் தேர்தல்கள் ஆணைக்குழு சமய செயற்பாடுகளுக்கு மட்டும் தடை விதிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் […]

Read More

நாளை அவசர சர்வகட்சி கூட்டம்..!

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி தொடர்பாக நாளை அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் முயற்சியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான ஒப்புதலைத் தாம் வழங்கி இருப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வாறான ஒரு சர்வகட்சி கூட்டத்தை நடத்துமாறு இன்று காலை எதிரணியைச் சேர்ந்த 12 கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க […]

Read More

பிரசார பணிகளை ஆரம்பித்த இலங்கை தொழிலார் காங்கிரஸ்..!

நடைபெறவுள்ள 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தில் பிரசார பணிகளை இலங்கை தொழிலார் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது. கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் இன்றைய தினம் (3/29/2025) இடம்பெற்ற சிறப்பு வழிப்பாட்டு பூஜைகளுடன், நடைபெறவுள்ள 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார பணிகளை இலங்கை தொழிலார் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பொன்றும் கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வின்போது இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும் நிதிச் […]

Read More

காங்கிரஸ் எப்போதும் கொடி கட்டி பறக்கும் ; ஜீவன் தொண்டமான்!

கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிர்வாக தவறு இருக்குமென ஆரம்பத்தில் நினைத்தோம். காரணம் என்னவென்று வினவியபோது, இதன் பின்னணியில் சூழ்ச்சி ஏதும் இருக்குமோ […]

Read More

பெருந்தோட்ட மக்களுக்கு காணியுரிமை வழங்கப்பட வேண்டும் – ஜீவன் வலியுறுத்தல்..!

பெருந்தோட்ட மக்களின் வீடமைப்பு பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் அவர்களுக்கு காணியுரிமை வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மலையகத்தில் மாற்றமொன்று ஏற்பட வேண்டுமாயின் காணியுரிமையே வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

Read More

ஜீவனுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

கடந்த வருடம் மே மாதம் 30 ஆம் திகதி களனி வெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனத்தினர் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த வழக்கு இன்று (3/3/2025) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கில் சந்தேக நபர்களாக ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேர் பெயரிடப்பட்டிருந்த […]

Read More

தமிழக முதலமைச்சருடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம், தி.மு.க தலைமையகத்தில் இன்றைய தினம் (19/02/2025) ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் தி.மு.க தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தார்.

Read More

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு போதியளவு நிதி ஒதுக்கவில்லை – ஜீவன் தெரிவிப்பு..!

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு முன்னைய ஆட்சி காலத்தின் போது போதியளவு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளவில்லையென முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (07.02.2025) பாராளுமன்றத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 2024 ஆம் ஆண்டு நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கனிசமான நிதி ஓதுக்கீடானது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பெருந்தோட்ட மக்களுக்கு மட்டும் வீடமைப்பு, வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீதிகள் அபிவிருத்தி ஆகியன தோட்ட உட்கட்டமைப்பு […]

Read More