இரு வாரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்..!
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 1,15,043 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,67,804 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மேலும், இந்த மாதத்தில் இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ்
ஜேர்மனின் முன்னாள் ஜனாதிபதி ஹோர்ஸ்ட் கோஹ்லர் காலமானார்..!
ஜேர்மனின் முன்னாள் ஜனாதிபதியும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பிரதானியுமான ஹோர்ஸ்ட் கோஹ்லர் (Horst Kohler) தமது 81 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். பொருளாதார நிபுணரான ஹோர்ஸ்ட் கோஹ்லர் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகப் பதவி வகித்திருந்தார். அதன் பின்னர் அரசியலுக்குப் பிரவேசித்து ஜேர்மனியின் ஜனாதிபதியாகத் தெரிவானார். 2004 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியின் ஜனாதிபதியாகத்
மத்திய தரைக்கடலில் விபத்துக்குள்ளாகிய படகுகள்!
தெற்கு இத்தாலியில் மத்தியத்தரைக்கடல் பகுதியில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பதினொரு அகதிகள் உயிரிழந்துள்ளதோடு, 64 பேர் காணாமல் போயுள்ளனர். இதனை, ஜேர்மன் தொண்டு நிறுவனம், இத்தாலிய கடலோர காவல்படை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஜேர்மன் உதவிக் குழுவின் நாதிர் மீட்பு கப்பல் இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது அங்கு படகு ஒன்று
மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள்
வாள் மற்றும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்பன பதிக்கப்பட்ட பீரங்கி உட்பட 6 கலைப்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இன்று (29) அதிகாலை 05.05 மணி அளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-554 மூலம் ஜேர்மன், பிராங்பேர்ட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தொல்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கான