வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பலவாகனங்களுடன் மோதி விபத்து- ஒருவர் பலி!
பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐந்து பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஒரு கனரக வாகனம் (Bucket truck) பல வாகனங்களுடன் மோதியதே இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ் விபத்து தொடர்பில்
பொலிஸ் அதிகாரிகளை வாளால் வெட்ட முயன்ற நபர் மீது துப்பாக்கிச் சூடு!
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை வாளால் வெட்ட முயன்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சட்டவிரோத மதுபானம் தொடர்பில் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, தெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிமெல்லகஹ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்ட போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன்போது, தெலிக்கடை பொலிஸ் அதிகாரிகளை நபரொருவர் வாளால் தாக்க
வேன் விபத்தில் உயிரிழந்த களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரின் மனைவி இன்று காலமானார்!
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த களனி பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவு பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த குணேந்திரவின் மனைவியும் காலமானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதன்படி, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. கடந்த 18 ஆம் திகதி குருநாகல்
நீரிழிவு நோய்க்கான மருந்துகளுக்கு அதிகளவு நிதிச்செலவு;நளிந்த ஜயதிஸ்ஸ!
மருத்துவ விநியோகப் பிரிவினூடாக அரச வைத்தியசாலைகளுக்கு இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குவதற்காகக் கடந்த ஆண்டு பாரிய அளவு நிதி செலவிடப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். காலி – கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திறைசேரியில் இருந்து வழங்கப்படும் நிதியை அதிகளவில் மருந்துகளைக்
போதைப்பொருள் கடத்தல்காரரான கல் சம்பத் கைது!
கொழும்பு – மட்டக்குளி போதைப்பொருள் கடத்தல்காரரான கல் சம்பத், சமித்புர பகுதியில் வைத்து எனப்படும் சஞ்சீவ துஷார மதுவரி திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரைக் காப்பாற்ற முற்பட்டதுடன்,
வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட துமிந்த சில்வா!
கடந்த வாரம் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள பொது அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையைத் தொடர்ந்து துமிந்த சில்வாவை மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன மரணம்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன தனது 71ஆவது வயதில் இன்று காலமானார். கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவில் விசேட வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (நவம்பர் 5) காலை 8 மணி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ளனர். இதே பிரச்சினைக்காக முன்னர் மேற்கொள்ளப்பட்ட டோக்கன் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மருத்துவமனை அதிகாரிகளிடமிருந்து தீர்வு கிடைக்காததால் மருத்துவர்கள் விரக்தியை
மனைவியை தாக்கிய கணவர்!
ஜா-எல, படகம பிரதேசத்தில் 32 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவனால் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை (09.10) இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தைத் தொடர்ந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் பலி…!
கொழும்பு – வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 32 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்