தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நிதி சுதந்திரம் அவசியம் – சமன் ஸ்ரீ ரத்நாயக்க!
தேர்தல்கள் ஆணைக்குழு உண்மையில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமானால், அதன் செயற்பாடுகளுக்கு தேவையான நிதி சுதந்திரம் கட்டாயமாக இருக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேவையான அளவிலான அதிகார
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் குறித்து வெளியான அறிவிப்பு..!
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அறிவிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. குறித்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.ஏல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவடைந்து 21 நாட்களில் குறித்த பெயர் பட்டியல் அறிவிக்கப்பட வேண்டும். எனினும் தற்போது வரை தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை
தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை..!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வரவு செலவை சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, நாளையுடன் இதற்கான கால எல்லை நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போதான செலவீனங்களை கோரியுள்ளது. மேலும் கட்சியின் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் இது குறித்த சமர்ப்பனங்களை மாவட்ட தேர்தல்
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது குறித்து குழப்பகரமான சூழ்நிலை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, அந்தந்த பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளவர்களை பெயரிட்டு ஒருவாரத்துக்குள் அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை அறிவுறுத்தியுள்ளது. ஒரு கட்சியினால் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரம் பெறப்படாத சபைகளின் பதவி நிலைகள் அதற்கு பொறுப்பான ஆணையாளரால் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, நடைபெற்று முடிந்த தேர்தல் பெறுபேறுகளுக்கு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் நிறைவு..!
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்தப்பட்டது. 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். இத்தேர்தலில்
எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு விடுமுறை..!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, எதிர்வரும் 6ஆம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம், பல்கலைக்கழகங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. அத்துடன், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிக்குழாமினருக்கும் மாணவர்களுக்கும் குறித்த தினத்தில் விடுமுறை வழங்குமாறும்
உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள்..!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படாமையால் இந்த முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்ட வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்கள்
மே 3 ஆம் திகதி முதல் அமைதி காலம் ஆரம்பம்..!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் மே 3 ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாகிறது.
அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பம்..!
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. நாளைய தினமும் எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், காவல்துறை திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அஞ்சல் மூல
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று நேற்றுத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றிருந்தது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது. அதேநேரம், இம்முறை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்றையும் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று நடத்தியது. இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக