ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டல் துணைச் செயலாளர் நாயகமாக ஹரின் பெர்னாண்டோ பதவியேற்பு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அரசியல் அணிதிரட்டல் துணைச் செயலாளர் நாயகமாக அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார். சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர். எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு கட்சித் தலைமையை மறுசீரமைத்து, அடிமட்ட அரசியல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் பரந்த
மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு — வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு!
மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மாகாண எல்லை நிர்ணய செயல்முறை முடிந்த பிறகே தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். எதிர்க்கட்சித் எம்.பிக்கள் மாகாண சபைத் தேர்தல் குறித்த கேள்விகளை எழுப்பியபோது பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், அரசு
நாட்டை அனுரவிடம் ஒப்படைத்த மக்களுக்கு இன்று ஏமாற்றமே மிஞ்சியுள்ளது; சஜித் பிரேமதாச!
சுபநேரத்தில் நாட்டை அனுரவிடம் ஒப்படைத்த மக்களுக்கு இன்று ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மாவனல்லை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் மே 3 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 3 ஆம் திகதி முதல் தேர்தல் நாள் வரையிலான காலம் தேர்தல் அமைதி காலமாக அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இன்று வரை வீடு
வாக்குறுதிகளை செயற்படுத்த முடியாத நிலையில் ஆளும் தரப்பிலுள்ளவர்கள் பொய்காரர்களாகி விட்டனர்; நாமல் ராஜபக்ச!
தேர்தல் காலங்களில் செயற்படுத்த முடியாத வாக்குறுதிகளை வழங்கி இன்று ஆளும் தரப்பிலுள்ள 159 உறுப்பினர்களும் பொய்காரர்களாகி விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். எல்லா அரசாங்கங்களும் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி அதிகாரத்துக்கு வந்த பின்னரே அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிந்திப்பதாகச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, இதற்குச் சிறந்த உதாரணம் தற்போதைய அரசாங்கம் ஆகும் எனவும் குறிப்பிட்டார். செய்ய முடியாத
தேர்தல் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்; தேர்தல் ஆணையாளர்!
தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றப்படாவிட்டால், வாக்காளருக்கு அவற்றைக் கேள்வி கேட்க உரிமை உண்டு என்று தேர்தல் ஆணையாளர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறுகிறார். இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இதற்காக தேர்தல் சட்டங்களும் ஏதேனும் ஒரு வகையில் மாற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இருப்பினும், நாட்டின் தேர்தல் முறையில் வாக்குகளை திரும்பப்
அதிகாரத்தை திருடியவர்கள் என அரசினை விமர்சித்த விமல் வீரவங்ச..!
‘‘தேர்தல் காலப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. அதிகாரத்துக்காக பொய்கூறி மக்களின் வாக்குகளையும் இறையாண்மை அதிகாரத்தையும் திருடி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்
பெலாரஸ் ஜனாதிபதியாக லுகாஷென்கோ தெரிவு..!
பெலாரஸ் ஜனாதிபதியாக கடந்த 1994ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்துவரும் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, இந்த வார இறுதியில் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், பெயரளவுக்கு நடத்தப்பட்ட இந்தத் தோ்தலை ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் நிராகரித்தன. ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதினுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட லுகஷென்கோ, தோ்தலில் 87 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி
SJB-UNP இணைந்து பொதுக்கூட்டணி அமைக்க முடிவு!
பொதுக்கூட்டணியை அமைத்து அடுத்துவரும் தேர்தல்களை முகம் கொடுக்க ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணங்கியுள்ளன. இதுதொடர்பாக இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்றிரவு கலந்துரையாடினர். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய வேண்டும் என்ற யோசனை ஐக்கிய தேசிய கட்சியால் முன்வைக்கப்பட்டது. இதனை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தது. இந்தநிலையில் இரண்டு கட்சிகளும்
மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் அரசாங்கம்; குற்றம் சாடிய திலித் ஜயவீர!
தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பது தொடர்பில் அரசாங்கம் உண்மையாக இருக்க வேண்டும் என சர்வஜன பலய (SB) தலைவரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் (9) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜயவீர, அரசாங்கம் தனது விஞ்ஞாபனம் மற்றும் தெளிவான வேலைத்திட்டம் இன்றி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக