ஆரம்பமான நயினை – நல்லூர் பாதயாத்திரை!
நயினை முதல் நல்லூர் வரையான வரலாற்று சிறப்புமிக்க பாதாயத்திரை இவ்வருடம் 61வது வருடமாக நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் இருந்து நேற்று (18/08/2025) ஆரம்பமானது. அகிலம் போற்றும் அகிலாண்ட நாயகி நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இருந்து நாகம் தாங்கிய வேல் பவனி கடல் மார்க்கமாக குறிகட்டுவான் இறங்குதுறையை வந்தடைந்து. பாத யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு வீதி ஊடாக
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 9ம் நாள் காலைத்திருவிழா!
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 9ம் நாள் காலைத்திருவிழா இன்றைய தினம்( 04 )வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன் போது மூலமூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் பக்தி பூர்வமாக நடைபெற்றது. இத்தகைய ஆன்மிக விழாக்கள் நயினாதீவு சமூகத்தின் ஒற்றுமையையும், கலாச்சாரத் தமிழ்மையை மேம்படுத்தும் சிறப்பு விழாக்களாகும்.
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் தீவகப் பகுதி கடற்றொழில் அமைப்புக்களுடன் சந்திப்பு…!
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷ் யாழ்ப்பாணம், தீவகப் பகுதி கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவகப் பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ். புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் சனசமூக நிலைய மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்ச்சன் பிகிராடொ,
பொருட்கள் ஏற்றும் படகு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் மரணம்!
நேற்றைய தினம் 02/07/2024 இரவு குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கல், மண் ஏற்றி வந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியது. இச் சம்பவத்தில் புங்குடுதீவைச் சேர்ந்த இந்திரலிங்கம் அருன்கோபி எனும் 42 வயது நபரே இவ்வாறு பரிதாபகரமாக மரணமாகியுள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழில் வழிபாட்டில் ஈடுபட்ட சஜித்..!
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாகதீபம் மற்றும் நயினாதீவு ஆலயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நேற்றையதினம் (11) வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப ரஜமகா விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், விஹாராதிபதியை தேரரை சந்தித்து ஆசியும் பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கும் சென்று விசேட
திருவிழா தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்….
யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவினை எதிர்வரும் ஜீன் 07ஆம் திகதி தொடக்கம் ஜீன் 22ஆம் திகதி வரை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், திருவிழாக் காலங்களில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை மற்றும் தனியார்
கச்ச தீவு செல்வோருக்கான அறிவுறுத்தல்கள்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு யாழ்.மாவட்ட செயலரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடுவதுடன், கச்சதீவுக்கான படகுச்சேவையானது
யாழில் அச்சுவெலியில் அதிக மழை
யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெய்த மழையில் அச்சுவேலி பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இதற்கமைய, அச்சுவேலியில் 45.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், யாழ். நகர் பகுதியில் 35.8 மில்லி மீற்றர், வடமராட்சி அம்பனில் 34.4 மில்லி மீற்றர், தெல்லிப்பழையில் 33.3 மில்லி மீற்றர், நயினாதீவில் 29.1