Tamil News Channel

Blog Post

Tamil News Channel >

மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி..!

பொரளை டி.எஸ்.சேனநாயக்க மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தின் 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் பதவிய போகஸ்வெவ, அருணகம, இலக்கம் 63 இல் வசித்து வந்த நளின் சம்பத் பிரேமரத்ன, ஹேரத் என்ற 24 வயதுடைய இளைஞர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் இவர் 18 மாடிகள் கொண்ட கட்டடத்தின் 14வது மாடியில் கொத்தனார் ஒருவருக்கு உதவிய போது வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Read More