தேசிய தொழிற் பயிற்சி ஆணைக்குழுவில் தமிழ்மொழி கற்பித்தல் பற்றாக்குறை !
தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணைக்குழுக்களில் சிங்கள மொழியில் மட்டுமே பயிற்சிகள் வழங்கப்படுவதால், தமிழ்மொழி மூல மாணவர்கள் இப்பயிற்சிகளிலிருந்து விலகும் நிலை உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மொழி தடைகள் காரணமாக
எம்.பி அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் !
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (21) நாடாளுமன்றத்தில், புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் தன்னைக் கொலை செய்ய மிரட்டியதாக கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று அவர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் புத்தளம் மருத்துவமனை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, பைசல் கோபமடைந்து தன்னை கொல்ல மிரட்டியதாக கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில்,
நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகிய நாமல் ராஜபக்ச!
இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். இதன்படி, வெற்றிடமான பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று (நவம்பர் 19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதியுடன் சந்திப்பு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று (நவம்பர் 19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேசவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு மதியம் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில், தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிற பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டங்கள், என்பன
நவம்பர் 21 அன்று நுகேகொடையில் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு – நாமல் ராஜபக்ஷ அறிவிப்பு!
அரசாங்கத்தை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஒன்றுகூடி, அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் விவசாயிகளுக்கு
தோட்டத் தொழிலாளர்களுக்கான நிதி ஒதுக்கீடு சட்டவிரோதமானதா?: ரோஹினி கவிரத்ன கோரிக்கை
தனியார் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒருவருக்கு ரூ. 200 வீதம் வழங்க பாதீட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 5 பில்லியன் தொடர்பாக கையூட்டல்/ஊழல் ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகியோரிடம் விசாரணை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையின் முக்கிய அம்சங்கள், இந்த நிதி ஒதுக்கீடு சட்டவிரோதமானதா
தனது அரசியல் வாழ்க்கைக்கு களங்கம் ஏற்படுத்தியதற்கு எதிராக 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய எம்.பி அடைக்கலநாதன்!
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தனது பெயருக்கும் கௌரவத்துக்கும் பங்கும் விளைவிக்கக்கூடிய விதமாக அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவதற்கும், இணைய ஊடகங்களில் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கக்கூடிய வகையிலும் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் நடவடிக்கை எடுத்ததாக கூறி, அவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக இழப்பீடு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாவது: நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் மேற்கொண்ட கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பரிந்துரைக்கு பின், உறுப்பினர்களின் உரை நேரம் கட்டுப்படுத்த நடவடிக்கை!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையாற்றும் நேரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அர்ச்சுனா தனது கருத்தில், நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் உரையாற்றும் உறுப்பினர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் பின்னர் உரையாற்றும் உறுப்பினர்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை என
நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை!
2008 ஆம் ஆண்டு முதல் இரண்டு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார பிடியாணை பிறப்பித்துள்ளார். இன்று (29) வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட எம்.பி. ஆஜராகவில்லை. இது தொடர்பில் அவரது வழக்கறிஞர் தெரிவிக்கையில், மனுவர்ண ஒரு தேசிய நில விநியோக விழாவில் பங்கேற்றதால் விசாரணைகளில்
ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல்: அரசியல் காரணமல்ல – காவல்துறை மா அதிபர்!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் காரணங்களால் அல்ல என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுடனான ஜகத் விதானவின் தொடர்புகளே இந்த அச்சுறுத்தலுக்குக் காரணம் என ஆரம்ப விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்துடன் அரசியல்