Monday, March 16, 2026
No menu items!

பதுளை

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.    

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீண்டும் விளக்கமறியலில்!

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே 19 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு விசேட அறிவிப்பு!

சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதற்காக 10 சிறப்பு ரயில்கள் சேவையில் சேர்க்கப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார். அதன்படி, இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு ஒரு சிறப்பு...

பதுளையில் உந்துருளி விபத்தில் ஒருவர் மரணம்!

பதுளை - பண்டாரவளை வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். பண்டாரவளை நகரில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் மீது உந்துருளி மோதியதில் அவர் உயிரிழந்தார். அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த உந்துருளியின் சாரதி சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளையைச் சேர்ந்த 36 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

தடம் புரண்ட எல்ல ஒடிஸி ரயில்..!

நானுஓயாவிலிருந்து  பதுளை நோக்கிப் பயணிக்க இருந்த எல்ல ஒடிஸி ரயில் நானுஓயாவில் இன்று சனிக்கிழமை (4/5/2025) தடம் புரண்டுள்ளது. குறித்த ரயில் இன்று காலை 08:10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இருந்த நிலையில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளது. குறித்த ரயிலில் பதுளை நோக்கிப் பயணம் மேற்கொள்வதற்காக வருகை தந்திருந்த பயணிகள் பாரிய சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர். எவ்வாராயினும்...

வைரஸ் தாக்கம் காரணமாக அழிவடைந்து வரும் பயிர்ச்செய்கை!

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் பயிரிடப்படும் தக்காளி, ஒரு வகை வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் காரணமாக பயிர்ச்செய்கை முற்றிலும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, வெலிமடை, ஊவாபரணகம, எல்ல, பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை போன்ற பகுதிகளில் இவ்வாறு தக்காளி பயிர்ச்செய்கையானது வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்துக்குப் பல...

இயல்பு நிலைக்குத் திரும்பிய மலையக ரயில் சேவை!

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் தடம் புரண்டதால் நிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் பாதையில் போக்குவரத்து இன்று (10) காலையுடன் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலி எல, பசறை, கண்டகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, உவபரணகம மற்றும் சொரேனதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நுவரெலியா மாவட்டத்தின்...

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கண்டகெட்டிய, ஊவா பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரணதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை அமுலில்...

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

பதுளை - பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (12) பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய, கல்போக்க, பெரகெட்டியவைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் லொறியில் மோதி மோட்டார்...
- Advertisement -spot_img

Latest News

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி...
- Advertisement -spot_img
Verified by MonsterInsights