உயர்தரப் பரீட்சை 2025: இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகளுக்கு தடை!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு, அனைத்து தனியார் வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் மீது இன்று (3) நள்ளிரவு முதல் தடை அமுலாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை தொடரும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் உயர்தரப் பரீட்சை நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர்
2025ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் 2025 செப்டெம்பர் 18 ஆம் திகதியிலிருந்து 2025 ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை இணையவழி (online) மூலமாக மட்டுமே பெறப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பரீட்சைக்குத் தோற்ற விரும்புவோர், குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2025 ஒக்டோபர் 09
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியன!
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (11) வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான https://www.doenets.lk/ மற்றும் http://www.results.exams.gov.lk/ ஆகியவற்றுக்குள் பிரவேசித்து பரீட்சை முடிவுகளைப் பார்வையிட முடியும்.
பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த விண்ணப்பங்களை மே 30 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு!
க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 171,100 பரீட்சார்த்திகளுக்காக 1,228 பரீட்சை நிலையங்களில் குறித்த செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீடு தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் சில நாட்களில் பெறுபேறுகள் தயாரிக்கப்பட்டுச் சரிபார்க்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர செய்திப் பிரிவொன்றுக்கு தெரிவித்துள்ளார். 253,390 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 79,795 தனியார் பரீட்சார்த்திகளும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!
அண்மையில் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1,066 மத்திய நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகளுக்காக 16,000 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு..!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணிகள் 1066 மதிப்பீட்டு மையங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறும். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக 16000 ஆசியிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை கடந்த
இன்று நள்ளிரவு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புக்களுக்கு தடை!
இன்று நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் பரீட்சைக்கான பயிற்சிகளை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி