பாகிஸ்தான் வழங்கிய நிவாரண பொருட்கள் தொடர்பில் வெளியான உண்மை..!!
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினை அடுத்து பாகிஸ்தானினால் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களை பற்றிய போலியான தகவல்கள் பரபரப்பப்படுவதாக சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு காலாவதியான பொருட்களை பாகிஸ்தான் அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனினும் அந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை சிவில் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார். பாகிஸ்தானினால்
2026 T20 உலகக்கோப்பை: பெப்ரவரி 7 முதல் ஆரம்பம்!
10-வது ஐசிசி ஆண்கள் இருபதுக்கு 20 (T20) உலகக்கோப்பை தொடரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளன. இத்தொடர் 2026 பெப்ரவரி 7 முதல் 29 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சம்பியனான இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை மும்பையில் எதிர்கொள்கிறது. தொடக்க நாளில் இந்தியா உட்பட ஆறு அணிகள் களமிறங்கும். குழு
T20 முத்தரப்பு தொடருக்கு இலங்கை அணியில் வியாஸ்காந்த் !
பாகிஸ்தானில் ஆரம்பமாக உள்ள இருபதுக்கு 20 முத்தரப்பு தொடருக்கான இலங்கை தேசிய அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஒருநாள் தொடரின்போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இன்னும் முழுமையாக குணமடையாத வனிந்து ஹசரங்க அணியில் சேர முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக வியாஸ்காந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது கட்டாரில் நடைபெற்று
இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் போட்டிகள் பிற்போடப்பட்டன!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஒருநாள் தாமதமாக நடத்தப்படவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (13) நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (14) நடைபெறும். மேலும், முன்னதாக 15 ஆம் திகதி நடத்தப்படவிருந்த மூன்றாவது மற்றும் இறுதி போட்டி நவம்பர் 16 ஆம்
இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இணையவழி நுழைவுச் சீட்டு விற்பனை ஆரம்பம்!
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இணையவழி நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (4) மதியம் 12 மணிக்கு தொடங்கியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது. மூன்று போட்டிகளும் நவம்பர் 11, 13 மற்றும் 15 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. ரசிகர்கள் எளிதில் போட்டிகளைப் பார்வையிடும்
இரகசிய அணு ஆயுத சோதனைகள் நடத்தும் 4 நாடுகள் – டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!
பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்று அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் மேலும், “இத்தகைய சூழலில் அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதில் தவறில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது டொனால்ட் ட்ரம்ப் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
பாகிஸ்தான் ஒருநாள் அணியின் புதிய கேப்டன் – சஹீன் ஷா அப்ரிடி!!
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவராக வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளை கைப்பற்றிய சஹீன், அணியின் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்கிறார். முன்னாள் தலைவர் முகமது ரிஸ்வான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு விளக்கமும் இதுவரை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 12 உயிரிழப்பு!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த வன்முறையில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2021க்குப் பிறகு PoK பகுதியில் எழுந்துள்ள மிகவும் கடுமையான அமைதியின்மைக் சூழ்நிலையாக இது கருதப்படுகிறது. பாகிஸ்தான் அரசு 38 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதைக் தொடர்ந்து தொடங்கிய போராட்டம்,
இறுதிப் போட்டிகளுக்கு முன் ஆசியக் கிண்ண நிலவரம்: இந்தியா, இலங்கை புள்ளி பட்டியலில் முன்னணியில்!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின்படி, ஏ மற்றும் பி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அங்கம் வகிக்கும் அணிகளின் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, ஏ பிரிவில் இந்திய அணி, இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில், 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான், 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டி
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; 20 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம்!
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ.