அரசாங்கத்தினால் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவிப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தின் தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராயும் கூட்டமானது பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அமைச்சர் கெளரவ பேராசிரியர் ஏ. எச். எம். எச். அபயரட்ண அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (27.08.2025) மாலை 05.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் திரு.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டம்!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் அழைப்பின்பேரில் வருகை தந்த, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலின் பங்கேற்புடன், வடக்கு மாகாணத்திலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு நேற்று புதன்கிழமை காலை (23.07.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்வுகள் காணப்பட்டன. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர், வடக்கு
யாழில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை !
தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் (09.07.2025 ) காலை 09.30 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (09.07.2025 ) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க
வீதி புனரமைப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!
வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் வியாழக்கிழமை (20.02.2025) பி.ப. 02.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், அரசாங்கமானது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தின் வீதிகளைப் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தின் வீதிகளையும் புனரமைப்பதற்கும்
மன்னார் பிரதான பாலத்தடியில் கடற்கரை பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு…
மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் நீண்டகாலமாக இராணுவ சோதனை சாவடி அமைத்து காணப் பட்ட பகுதியில் கடற்கரை பூங்கா அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை (21.10) மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் மன்னார் நகர சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. நீண்ட நாட்களாக பிரதான பாலத்துக்கு அருகில் இராணுவ சோதனை சாவடி மற்றும் இராணுவ முகாம் வைக்கப்பட்டிருந்த
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!
கிளிநொச்சி மாவட்ட ஆவணி மாததிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி..!
இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய விமான நிலையத்திலேயே வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். விமான நிலையத்தில் விண்ணப்பித்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று