மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில், ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை நேற்று புதன்கிழமை மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். 38 வயது நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன் அவருக்கு அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். திக்கோடை சந்திக்கு அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. அம்பலாந்துறையைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரான 38 வயதுடைய தியாகராசா சுகிதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் […]