இன்றைய நாளுக்கான வானிலை..!!
நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம்
இன்றைய நாளுக்கான வானிலை..!!
வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை நாடு முழுவதிலும் படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று இரவு முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில்
கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ள திரவத்தை குடித்ததால் மீனவர்கள் இருவர் பலி!
புத்தளம், நரகலிய பகுதியில் கடலில் மிதப்பதைக் கண்டெடுத்த போத்தலில் இருந்து திரவத்தை குடித்த இரண்டு மீனவர்கள் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் மீன்பிடி தொழிலை சேர்ந்த நான்கு பேர் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மீதமுள்ள இரண்டு மீனவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்
வவுனியாவில் மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த பல மில்லியன் பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!
பத்து மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளை புத்தளம், கல்பிட்டியிலிருந்து வவுனியாவிற்கு கொண்டு சென்ற சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, குறித்த சந்தேகநபர் நேற்று முந்தினம் (19.10.2025) வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். கருவாடு கொண்டு செல்வதாகக் கூறி கெப் வண்டியொன்றினுள் மறைத்து வைத்து
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!!
கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கான பேருந்து சேவைகள், இணைந்த கால அட்டவணைக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் தனியார் பேருந்து சேவைகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் பேருந்து சேவைகளில்
இன்றைய நாளுக்கான வானிலை!
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (02) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இந்தப் பகுதிகளில் சுமார் 75 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம்
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, புத்தளம் முதல் பொத்துவில் வரை, குறிப்பாக கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நிலவக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கடல் அலைகளின் உயரம் 2.5 முதல் 3 மீட்டர் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாளுக்கான வானிலை!
சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை!
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் இன்று அதிக காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆலோசனை நாளை (மே 20) காலை 05.30 மணி வரை அமுலில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடற்படை மற்றும் மீனவ
இன்றைய நாளுக்கான வானிலை..!
அயன அயல் ஒருங்கல் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் , மன்னார் மற்றும்